உயிர் பிரியும் போதும் மாணவிகளை பத்திரப்படுத்திய ஆட்டோ ஓட்டுநர்

உயிர் பிரியும் போதும் மாணவிகளை பத்திரப்படுத்திய ஆட்டோ ஓட்டுநர்

தூத்துக்குடியில் பள்ளி மாணவிகளை தான் இறக்கும் நிலையிலும் பத்திரமாக அனுப்பி வைத்த ஆட்டோ ஓட்டுநரை நினைத்து மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராமலிங்கம். இவர் காலையும், மாலையும் பள்ளி மாணவிகளை தனது ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்று, திரும்ப அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தந்தைபோல அன்பு காட்டி வந்த இவரை மாணவிகள் ‘ஆட்டோ மாமா’ என்று அழைத்து வந்தனர். இந்நிலையில் இன்று மாலை ராமலிங்கம் மாணவிகளை பள்ளியிலிருந்து ஆட்டோவில் அழைத்து வந்துகொண்டிருந்தார்.

கோலி.. பும்ரா.. சொதப்பல் : தோல்விக்கு காரணம் இதுதானா ?
ஆட்டோ தேரடித்திடல் அருகே வந்த போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆட்டோவினை நிறுத்திய அவர், மாணவிகளை தனது ஆட்டோவிலிருந்து இறக்கி அடுத்த ஆட்டோவில் ஏற்றி பத்திரமாக அனுப்பியுள்ளார். பின்னர் தனது ஆட்டோவில் இருந்தபடியே நெஞ்சுவலியால் துடித்த அவர், இறுதியில் உயிரிழந்துள்ளார்.
தான் இறக்கும் நிலையிலும் மாணவிகளைப் பத்திரமாக வீடு சேர்த்த அவரின் தியாக உணர்வை நினைத்து அப்பகுதியினர் நெகிழ்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
ஆம் ஆத்மி வெற்றிக் கொண்டாட்டத்தில் தனித்து தெரிந்த ‘குட்டி கெஜ்ரிவால்’Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh