‘பிகில்’ தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் வருமான வரித்துறையினர் விசாரணை !

‘பிகில்’ தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் வருமான வரித்துறையினர் விசாரணை !

பிகில் படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விசாரணைக்காக வருமானவரி புலனாய்வுப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் வருமான வரித்துறையினர் சரமாரியான கேள்விகளை முன் வைத்ததாக கூறப்படுகிறது.

பிகில் திரைப்படத்தின் வசூல் தொடர்பாக அதனை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம், அவர்களுக்கு கடன் கொடுத்த அன்புச்செழியன் மற்றும் நடிகர் விஜய் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 3 தரப்பினரும் விசாரணைக்கு ஆஜராகும்படி வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. அதனை ஏற்று நடிகர் விஜய் மற்றும் நிதியாளர் அன்புச்செழியனின் ஆடிட்டர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் பும்ரா..! 

அதன் தொடர்ச்சியாக ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி வருமான வரித்துறையின் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் பிகில் படம் தயாரிக்க நிதி எங்கிருந்து கிடைத்தது, யார் யாரிடமெல்லாம் கடன் வாங்கினீர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ஊதியம் எப்படி வழங்கப்பட்டது, பிகில் படம் மூலம் கிடைத்த வருமானத்தை எதிலாவது முதலீடு செய்திருக்கிறார்களா ? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh