ஆட்டோவில் விட்டுச்சென்ற நகை, பணம்.. நேர்மையாக நடந்து கொண்ட ஓட்டுநர் – குவியும் பாராட்டு

ஆட்டோவில் விட்டுச்சென்ற நகை, பணம்.. நேர்மையாக நடந்து கொண்ட ஓட்டுநர் – குவியும் பாராட்டு

மதுரையில் ஆட்டோவில் தவறவிட்ட நகை மற்றும் பணத்தை நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண் கடந்த 10ம் தேதி காளவாசல் செல்வதற்காக ஆட்டோவில் பயணித்துள்ளார். பயணம் முடிந்து ஆட்டோவிலிருந்து இறங்கிய ராஜலட்சுமி தன் கையில் வைத்திருந்த கைப்பையை மறந்து ஆட்டோவிலேயே விட்டு சென்றுள்ளார். நீண்ட நேரம் கழித்து ஆட்டோவில் இருந்த பையை கண்ட ஓட்டுநர் ஷேக் மீரான் பையை திறந்து பார்த்துள்ளார்.
‘வன்முறையைத் தூண்டும் பேச்சு’ – 2 ஆண்டுகளுக்குப் பின் சீமான் மீது வழக்குப்பதிவு 

அதில் நான்கரை சவரன் நகை மற்றும் 23 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கரிமேடு காவல்நிலையத்தில் நகை மற்றும் பணத்தை நேர்மையுடன் அவர் ஒப்படைத்தார்.
செவிலியர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு: இருவருக்கு தூக்குத்தண்டனை விதிப்பு 

இதையடுத்து, மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் பையை தவறவிட்ட ராஜலட்சுமியை கண்டறிந்து நகை மற்றும் பணத்தை வழங்கினார். மேலும், நேர்மையாக கைப்பையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார். பயணிப்பெண் தவறவிட்ட பணம் நகைகளை நேர்மையுடன் திருப்பி கொடுத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh