Press "Enter" to skip to content

தமிழக அரசுக்கு பங்குத்தொகை அளிப்பு

சென்னை:தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், தன் லாபத்தில், தமிழக அரசுக்குரிய, ஆதாய பங்குத் தொகையாக, 21.60 கோடி ரூபாயை அளித்துள்ளது.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், 2017 – 18ல் ஈட்டிய லாபத்தில், தமிழக அரசின் பங்குத் தொகை, 21.60 கோடி ரூபாயை வழங்க வேண்டும். இதன்படி, நேற்று முன்தினம், அரசின் பங்கு தொகைக்கான காசோலையை, தலைமைச் செயலகத்தில், முதல்வர், இ.பி.எஸ்.,சிடம், தொழில் துறை அமைச்சர், எம்.சி.சம்பத் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர், ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்யமிஸ்ரா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Source: dinamalar

More from வணிகம்More posts in வணிகம் »