Go to ...
RSS Feed

மத்திய இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் காணாமல் போன வேலை வாய்ப்புகள்: கவலை தரும் புள்ளி விவரங்கள்


புதுடெல்லி: பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கடைசி வரவு செலவுத் திட்டம்டாக மத்திய இடைக்கால வரவு செலவுத் திட்டம் கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், பிரதமர் மோடியின் முக்கிய  வாக்குறுதியான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.அதோடு, வரவு செலவுத் திட்டம் அறிவிப்புக்கு முந்தைய தினம், தேசிய புள்ளியியல் கமிஷனின் அறிக்கை ஒன்றும் மீடியாவில் கசிந்தது.  அதில், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த 2017-18ம் ஆண்டில் வேலைவாய்ப்பின்மை 6.1  சதவீதமாக சரிந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த அறிக்கை இறுதியானது அல்ல என அரசு மறுத்தாலும், தகவல் வெளியிடாமல் அரசு தடுத்ததாக புள்ளியியல் ஆணைய செயல் தலைவர் மற்றும் 2  உறுப்பினர்கள் ராஜினாமா செய்த விவகாரம் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.வரவு செலவுத் திட்டம் உரையில் பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் ‘கடந்த 2 ஆண்டில், 2 கோடி வேலைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கி உள்ளோம்’ என்றார். ஆனால், 2016ம் ஆண்டிலிருந்து இதுவரை தொழிலாளர்கள்  புள்ளிவிவரம் தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் அரசு வெளியிடவில்லை. கடந்த 2014 தேர்தல் பிரசாரத்தில் ஆண்டுதோறும் 1 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி  அளித்தார். அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், வரவு செலவுத் திட்டம்டிலும் இந்த விவகாரம் மறைக்கப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 தொழில்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதன் மூலம் சில வேலைவாய்ப்புகள் உருவாக்கலாமே தவிர, தற்போதைய சூழலுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை இன்னும் அதிகளவில் இருப்பதாக நிபுணர்கள்  கூறுகின்றனர். நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 1.2 கோடி இளைஞர்கள் படித்து முடிக்கின்றனர். அவர்களுக்கு போதிய அளவில் வேலைவாய்ப்புக்கான சாத்தியங்கள் இல்லை என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.டெல்லியை சேர்ந்த இந்திய பொருளாதார கண்காணிப்பு நிறுவனம், கடந்த மாதத்தில் நாட்டின் வேலையின்மை 7 சதவீதத்திற்கும் அதிகமாக சென்றுவிட்டதாக பகீர் தகவலும் கூறுகிறது. நாட்டில் 90 சதவீதம் தொழிலாளர்கள்  அமைப்புசாரா பணியில் ஈடுபட்டு வருவதால், வேலைவாய்ப்பின்மை தகவலை திரட்டுவதில் சிரமங்கள் இருப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. முறைசார தொழில்துறையில் எந்த அளவுக்கு வேலை வாய்ப்பு கள்  பெருகியுள்ளன என்பதற்கு தெளிவான புள்ளி விவரங்களும் இல்லை. எனவே, வரும் மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஆளும் பாஜ கட்சிக்கு எதிராக வேலைவாய்ப்பின்மை விவகாரம் பெரிய அளவில் விமர்சிக்கப்படும் என்றும்  நிபுணர்கள் கூறுகின்றனர்.

Source: dinakaran