Press "Enter" to skip to content

வேலையில்லாதோருக்கு ரூ.3,000 உதவித்தொகை

சமீபத்தில் மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதை தற்போது 2 மாநில அரசுகளும்  நிறைவேற்ற உள்ளன. ராஜஸ்தானில் வரும் மார்ச் 1ம் தேதி முதல் வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ₹3,000 மற்றும் மகளிருக்கு ₹3,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தில்  படித்த வேலையில்லாத இளைஞர்களை குடிநீர் வரி சேகரிப்பது, மின்சார மீட்டர் ரீடிங் எடுப்பது, சொத்து வரி முகாம்களை நடத்துவது போன்ற பணிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்து  கொள்பவர்களுக்கு மாதம் குறையாமல் ₹4,000 உதவித்தொகை கிடைக்கும் என மபி அரசு அறிவித்துள்ளது.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »