Go to ...
RSS Feed

ஏர் – இந்தியா தலைவர்புதிய பொறுப்புக்கு மாற்றம்


புதுடில்லி:பொதுத்
துறை­யைச் சேர்ந்த, ஏர் – இந்­தியா நிறு­வ­னத்­தின் தலை­வர், பிர­தீப்
சிங் கரோலா, விமான போக்­கு­வ­ரத்து துறை செய­ல­ராக, பணி மாற்­றம்
செய்­யப்­பட்­டு உள்­ளார்.
ஏர் – இந்­தியா நிறு­வ­னத்­தின் புதிய தலை­வர் பெயர் அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

கர்­நா­டகா
ஐ.ஏ.எஸ்., பிரி­வைச் சேர்ந்த, பிர­தீப் சிங் கரோலா, 2018, ஜன., 9ல் ஏர் –
இந்­தியா நிறு­வ­னத்­தின் தலை­வ­ராக பொறுப்­பேற்­றார்.இவர் யோச­னைப்­படி தான், ஏர் – இந்­தி­யா­வில், மத்­திய அர­சின், 76 சத­வீத பங்­கு­களை விற்க முடிவு செய்­யப்­பட்­டது.

இதன்
மூலம், ஏர் – இந்­தி­யா­வின், 55 ஆயி­ரம் கோடி ரூபாய் கட­னுக்கு தீர்வு
கிடைக்­கும் என, எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், பழைய கடன்­களை ஏற்க,
எந்த நிறு­வ­ன­மும் முன்­வ­ரா­த­தால், பங்கு விற்­பனை திட்­டம் தோல்வி
அடைந்­தது.இதை­ய­டுத்து, ஏர் – இந்­தி­யா­வில் மேலும் பங்கு மூல­த­னம் மேற்­கொண்டு, புத்­து­யி­ரூட்ட, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.

இதற்­கா­கவே, ஏர் – இந்­தியா தலைமை பொறுப்­பில் இருந்து, பிர­தீப் சிங் கரோலா மாற்­றப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.ஏர் – இந்­தியா நிறு­வ­னத்­தின் புதிய தலை­வர் பெயர் விரை­வில்
அறி­விக்­கப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

Source: dinamalar