Press "Enter" to skip to content

பங்கு வர்த்தகத்தை கண்காணிக்க, ‘செபி’ உத்தரவு திடீர் விலையேற்றம், சரிவை தடுக்க நடவடிக்கை

புதுடில்லி:அன்­றாட பங்கு வர்த்­த­கத்­தில் திடீர் ஏற்ற, இறக்­கத்தை தீவி­ர­மாக கண்­கா­ணிக்­கு­மாறு, பங்­குச் சந்­தை­க­ளுக்கு, ‘செபி’ உத்­த­ர­விட்­டுஉள்­ளது.

சமீ­ப­கா­ல­மாக,
‘ஜெட் ஏர்­வேஸ், ஜீ எண்­டெர்­டெய்ன்­மென்ட், ஐ.எல் அண்டு எப்.எஸ்.,
பைனான்ஸ் கார்ப்­ப­ரே­ஷன், சன் பார்மா’ உள்­ளிட்ட நிறு­வ­னங்­களின் பங்கு
விலை, அசா­தா­ர­ண­மான ஏற்ற, இறக்­கத்தை கண்டு வரு­கின்றன.இதற்கு, நிதி நெருக்­கடி, ஊழல், விதி­மீ­றல், நிறு­வ­னர்­களின் கொள்கை, நிர்­வாக சீர்­கேடு போன்ற பல கார­ணங்­கள் கூறப்­ப­டு­கின்றன.
எனி­னும்,
பல நிறு­வ­னங்­களின் பங்­கு­கள், எவ்­வித கார­ண­மும் இன்றி, திடீ­ரென அதிக
ஏற்­றத்­தை­யும், பெரும் சரி­வை­யும் சந்­திக்­கின்றன.

அன்­றாட பங்கு
வர்த்­த­கத்தை, உள்­நாடு மற்­றும் சர்­வ­தேச நில­வ­ரங்­கள் தான்
தீர்­மா­னிக்­கின்றன. நிறு­வ­னங்­கள் தொடர்­பாக வெளி­யா­கும் செய்­தி­கள்,
அவற்­றின் பங்கு விலை­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்றன.பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, செபி, பங்கு வர்த்­த­கத்தை தீவி­ர­மாக கண்­கா­ணித்து வரு­கிறது.

பங்­குச்
சந்தை விதி­களை மீறும் நிறு­வ­னங்­கள், உள்­குத்து மூலம் செயற்­கை­யாக
பங்கு விலையை உயர்த்­தும் நிறு­வ­னங்­கள் போன்­ற­வற்றை கண்­டு ­பி­டித்து,
அவற்­றுக்கு அப­ரா­தம் விதிப்­பது உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்­கிறது.

கடிதம்

இந்­நி­லை­யில்,
அன்­றாட பங்கு வர்த்­த­கம் தொடர்­பான கண்­கா­ணிப்பை மேலும்
தீவி­ரப்­ப­டுத்­து­மாறு, செபி, பங்­குச் சந்­தை­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.இதை­ய­டுத்து, மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­கள், அவற்­றின் கீழ் உள்ள பங்­குத் தரகு நிறு­வ­னங்­க­ளுக்கு, தனித்­த­னி­யாக கடி­தம் அனுப்­பி­உள்ளன.அதில்,
வாடிக்­கை­யா­ளர்­களின் அன்­றாட பங்கு வர்த்­தக நட­வ­டிக்­கை­களை
தீவி­ர­மாக கண்­கா­ணிக்­கு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

பங்­கு­கள்
விலை செயற்­கை­யாக உயர்த்­தப்­ப­டு­கி­றதா; பங்கு விலை, அள­விற்கு
அதி­க­மான இறக்­கத்­தையோ அல்­லது ஏற்­றத்­தையே சந்­திக்­கி­றதா என்­பது
குறித்து தெரி­விக்­கு­மாறு, பங்­குச் சந்­தை­கள் கேட்­டுக்
கொள்­ளப்­பட்­டுள்ளன.அன்­றாட பங்கு வர்த்­த­கத்­தில், பங்­கு­கள் வேண்டி, ‘ஆர்­டர்’ கொடுப்­ப­தி­லும், அவற்­றின் வர்த்­த­கத்­தி­லும் ஏதே­னும் சந்­தே­கம்
ஏற்­பட்­டால், அது குறித்து உட­ன­டி­யாக தக­வலை பரி­மாற வேண்­டும் என­வும்
பங்­குச் சந்­தை­கள் அறி­வு­றுத்­தப்­பட்­டு உள்ளன.

இது குறித்து, பங்­குச் சந்தை அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:

சமீ­ப­கா­ல­மாக,
ஒரு சில நிறு­வ­னங்­களின் பங்­கு­கள் விலை அதிக ஏற்­றத்­தை­யும்,
சரி­வை­யும் சந்­தித்­தன. இது குறித்த சந்­தே­கத்­தின் பேரில், அன்­றாட
பங்கு வர்த்­த­கத்­தின் கண்­கா­ணிப்பை தீவி­ரப்­ப­டுத்­து­மாறு, பங்­குச்
சந்­தை­கள் கேட்­டுக் கொள்­ளப்­பட்­டுள்ளன.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Source: dinamalar

Mission News Theme by Compete Themes.