Press "Enter" to skip to content

Tamil Nadu Budget 2019: இன்று தமிழக வரவு செலவுத் திட்டம் தாக்கல்.. தேர்தலை கருத்தில் கொண்டு சலுகைகளை அள்ளிவீசுமா?

For Quick Alerts
Subscribe Now
 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
 

For Daily Alerts

சென்னை: 2019-2020-ஆம் நிதியாண்டுக்கான தமிழக வரவு செலவுத் திட்டம்டை நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

தமிழக வரவு செலவுத் திட்டத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த மாதம் 2-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் துவங்கியது. பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரை நடைபெற்றது.

8-ஆம் தேதி முதல்வர் எடப்பாடியின் உரையுடன் சட்டசபை கூட்டம் முடிவடைந்தது. இந்த நிலையில் 2019-2020-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் வரவு செலவுத் திட்டம்டை தாக்கல் செய்து வரவு செலவுத் திட்டம் உரையாற்றி வருகிறார்.

8-ஆவது முறையாக அவர் வரவு செலவுத் திட்டம் உரையை தாக்கல் செய்தார். இதற்காக சட்டசபையில் அவரது இருக்கையில் தனி மேடை அமைக்கப்பட்டது. லோக்சபா தேர்தல் வர இருப்பதால் வழக்கம் போல் இல்லாமல் புதிய அறிவிப்புகளும் சலுகைகளையும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் இடம் பெறும் என தெரிகிறது.

11-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 5 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என தெரிகிறது. வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் தொடங்கி முடிந்ததும் விவாதங்களின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஓபிஎஸ் பதில் அளிப்பார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed

Source: Goodreturns

Mission News Theme by Compete Themes.