Press "Enter" to skip to content

ஓபிஎஸ் வரவு செலவுத் திட்டம் மீது ஸ்டாலின் விமர்சனம்..!

For Quick Alerts
Subscribe Now
 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
 

For Daily Alerts

சென்னை: இன்று பிப்ரவரி 08, 2019, வெள்ளிக்கிழமை தமிழ சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக வரவு செலவுத் திட்டம், சாதாரண மக்களுக்கு எந்த வகையிலும் பயன்தராத உதவாக்கரை வரவு செலவுத் திட்டம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

ஏதோ சங்கீத வித்துவான், பல்லவியை திரும்பத் திரும்ப பாடுவது போல, தங்கள் கடிட்சியைப் பற்ரி திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லி கொண்டிருந்தார். ஏழை எளிய மக்களுக்கு எந்த வகையிலும் உதவாத இந்த 2019 – 20 மாநில வரவு செலவுத் திட்டம் சுமார் 150 நிமிடங்கள் பாடினார். வரும் வருவாயை சீராக்கி, நிர்வகித்து திட்டமிட்டு மக்கள் நலத் திட்டங்களை, எதிர்கால தமிழகத்தை கட்டமைக்கும் திட்டங்களுக்காக செலவு செய்ய வேண்டியது தான் தமிழக அரசின் கடமையாக இருந்தது. ஆனால் இப்போது அதிமுக அரசு கை நீட்டிய வாங்கிய கடனுக்கு சரியாக வட்டிப் பணத்தைச் செலுத்து வதைத் தான் இந்த 2019 – 20 வரவு செலவுத் திட்டம் தெளிவாக காட்டுகிறது.

தமிழக அரசு ஊழியர்கள், தமிழ பள்ளிக் கூடங்களில் பணி புரியும் ஆசிரியர்கள், தொடர்ந்து வீதிக்கு வந்து போராடும் சூழ்நிலை உருவானது. தங்கள் உரிமையைக் கேட்ட போராட்டக் காரர்கள் மீது ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆளும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளாக பணீடைநீக்கம் எல்லாம் செய்து போராட்டத்தைக் கட்டுப்படுத்தினர். அரசு ஊழியர் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் இரண்டு அரசுக் குழுக்கள் அமைத்தது.

அந்த குழு ஆய்வு செய்து அறிக்கையும் சமர்பித்துவிட்டது. அந்த குழு சொல்லி இருக்கும் பரிந்துரைகளை எப்படி நிறைவேற்ற இருக்கிறார்கள், அதற்கான களத் திட்டங்கள் என்ன என்பதை வரவு செலவுத் திட்டத்தில் தெரிவிக்காதது, ஏமாற்றமளிப்பதாகச் சொல்லி இருக்கிறார் ஸ்டாலின். அதோடு தமிழகத்தில் கூடுதலாக வேலைவாய்ப்புகள், பொருளாதார வளர்ச்சிகள் குறித்த எந்த திட்டங்களோ, அறிவிப்புகளோ இந்த வரவு செலவுத் திட்டத்தில் இல்லை.

ஓபிஎஸ் வரவு செலவுத் திட்டம்  மீது ஸ்டாலின் விமர்சனம்..!

தமிழக அரசுக்கு சுமாராக 4.19 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இந்த கடனை விரைவாக அடைக்க வருவாயை பெருக்க ஏதாவது திட்டங்கள் இருக்குமா எனப் பார்த்தால் ஏமாற்றம் தான். ஒரு அறிவிப்பும் இல்லை. எது எல்லாம் நடக்கக் கூடாதோ அது எல்லாம் நன்றாக நடந்திருக்கிறது. மாநில அரசின் கடன் அதிகரித்திருக்கிறது. வருவாய் பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது, தமிழகத்தின் மொத்த நிதி மேலாண்மையும் மோசமாக இருப்பதை இதுவே காட்டுகிறது. எப்படி 110 விதியை பயன்படுத்தி அறிவிப்பு வெளியிட்டார்களோ, அதேபோல், விவாதங்கள் செய்ய முடியாத, தேவையற்ற காகிதங்களில் மட்டுமே இருக்கும் வரவு செலவுத் திட்டம்டாக இருக்கிறது.

வரவு செலவுத் திட்டத்தில் விவசாயிகள் பற்றி ஒரு அறிவிப்பு கூட இல்லை. நெல் கொள்முதலுக்கு இன்னும் குறைந்த விலையே இருக்கிறது. தமிழகத்தில் கரும்பின் ஆதார விலையை இன்னும் உயர்த்தவில்லை. வாக்கு மொத்தத்தில் வரவு செலவுத் திட்டம், திவாலான நிறுவனம் போல் உள்ளது. அதிமுகவில் கொடநாட்டில் எப்படிக் கூட்டாக கொள்ளை அடித்தார்களோ..? அதே போல இப்போது தமிழக அரசு இயந்திரத்தில் வாகாக கொள்ளையடிக்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது என ஸ்டாலின் வறுத்தெடுத்திருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed

Source: Goodreturns

Mission News Theme by Compete Themes.