Go to ...
RSS Feed

‘புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்)’ நிறுவனங்களுக்கு மேலும் சலுகைகள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு தீவிரம்


புது­டில்லி:வேலை­வாய்ப்­பு­களை
அதி­க­ரிக்­கும் நோக்­கில், வலை­த­ளம் மூலம் புது­மை­யான தொழில்­களில்
ஈடு­படும், ‘புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்)’ நிறு­வ­னங்­க­ளுக்கு மேலும் பல சலு­கை­களை
வழங்க, மத்­திய அரசு பரி­சீ­லித்து வரு­கிறது.

‘பிளிப்­கார்ட்,
ஸ்நாப்­டீல், ஷாப்க்­ளுவ்ஸ், ஓலா, ஊபர்’ போன்ற புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்) நிறு­வ­னங்­களை
துவக்க, ‘ஏஞ்­சல் பண்டு’ எனப்­படும், துவக்க கால நிதி­யு­தவி
நிறு­வ­னங்­கள் உத­வு­கின்றன. இந்­நி­று­வ­னங்­கள் மூலம் திரட்­டும்
முத­லீட்­டிற்கு, வரு­மான வரி விலக்கு அளிக்­கப்­ப­டு­கிறது.
எனி­னும்,
ஏஞ்­சல் பண்டு முத­லீடு, புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்) நிறு­வ­னங்­களின் சந்தை மதிப்பை விட
அதி­கம் இருந்­தால், அத்­தொ­கைக்கு, 30 சத­வீ­தம் வரி
விதிக்­கப்­ப­டு­கிறது. இதை, ‘ஏஞ்­சல் வரி’
என்­கின்­ற­னர்.

இந்த வரி, சட்ட விரோத பணப் பரி­மாற்­றம், வரி ஏய்ப்பு ஆகி­ய­வற்றை தடுக்க அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.ஆனால்,
இந்த வரி­யால், நேர்­மை­யாக தொழில் செய்­வோ­ரும் பாதிக்­கப்­ப­டு­வ­தாக,
புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்) நிறு­வ­னங்­கள் சார்­பில் வரு­மான வரி துறைக்கு
தெரி­விக்­கப்­பட்­டது.எனவே, ஏஞ்­சல் வரி தொடர்­பான நட­வ­டிக்­கையை, வரு­மான வரி துறை தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைத்­துள்­ளது.

இதை­ய­டுத்து,
தொழில் மற்­றும் உள்­நாட்டு வர்த்­தக மேம்­பாட்டு துறை­யான,
டி.பி.ஐ.ஐ.டி., உண்­மை­யான புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்) நிறு­வ­னம் எது என்­பதை, வரை­யறை
செய்ய உள்­ளது.
அதன் அடிப்­ப­டை­யில், புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்) நிறு­வ­னங்­கள் திரட்­டும் முத­லீ­டு­க­ளுக்கு வரி விலக்கு பெற முடி­யும்.

அடையாளம்

இந்­நி­லை­யில்,
புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்) துறையை மேலும் ஊக்­கு­வித்து, வேலை­வாய்ப்­பு­களை
அதி­க­ரிப்­ப­தில், மத்­திய அரசு தீவி­ரம் காட்டி வரு­கிறது.இது குறித்து, நிதி துறை வட்­டா­ரம் கூறி­ய­தா­வது:
மத்­திய
அரசு, புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்) நிறு­வ­னங்­க­ளுக்கு மேலும் பல சலு­கை­களை வழங்க
உள்­ளது. இது தொடர்­பாக, டி.பி.ஐ.ஐ.டி., மற்­றும் வரு­வாய் துறை
அதி­கா­ரி­களின் ஆலோ­சனை
கூட்­டம் நடை­பெற்­றது.

அதில், போலி
நிறு­வ­னங்­களில் இருந்து, புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்) நிறு­வ­னங்­களை
அடை­யா­ளப்­ப­டுத்த, அவற்­றி­டம் முத­லீடு குறித்த பிர­மாண பத்­தி­ரம்
பெறு­வது குறித்து, விவா­திக்­கப்­பட்­டது.
அத்­த­கைய நிறு­வ­னங்­கள்
திரட்­டும் முத­லீ­டு­கள் குறித்து, வரு­மான வரி துறை கேள்வி கேட்­காது.
இத­னால், நேர்­மை­யான புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்) நிறு­வ­னங்­கள், அவற்­றின் முத­லீட்டு
விப­ரங்­களை வெளிப்­ப­டை­யாக தெரி­விக்­கும் நிலை ஏற்­படும்.

விண்மீன்ட்
அப் நிறு­வ­னங்­களில், ஏஞ்­சல் பண்டு நிறு­வ­னங்­கள் செய்­யும், 10 கோடி
ரூபாய் வரை­யி­லான முத­லீட்­டிற்கு, தற்­போது, ஏழு ஆண்­டு­கள் வரி விலக்கு
அளிக்­கப்­ப­டு­கிறது. இதை, 10 ஆண்­டு­க­ளாக உயர்த்­து­வது குறித்­தும்,
கூட்­டத்­தில் விவா­திக்­கப்­பட்­டது.

உறவினர்கள்

புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்)
நிறு­வ­னங்­களில், முத­லீ­டு­களை ஊக்­கு­விக்க, அந்­நி­று­வ­னர்­களின்
உற­வி­னர்­கள், பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள நிறு­வ­னங்­கள் ஆகி­யவை
மேற்­கொள்­ளும் முத­லீ­டு­க­ளுக்கு, வரி விலக்கு வழங்­கு­வது குறித்­தும்
ஆலோ­சிக்­கப்­பட்­டது.

ஏஞ்­சல் பண்டு நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கு­வது
போல, புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்) நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்­யும், 100 கோடி
ரூபாய்க்­கும் அதி­க­மான விற்­று­மு­தல் உள்ள நிறு­வ­னங்­க­ளுக்­கு வரி
சலுகை அளிக்­கும் திட்­ட­மும் பரி­சீ­ல­னை­யில் உள்­ளது.மேலும், வரி
சலு­கைக்­கான முத­லீட்டு வரம்பை, 10 கோடி­யில் இருந்து, 50 கோடி ரூபா­யாக
உயர்த்­து­வது குறித்­தும் ஆலோ­சிக்­கப்­பட்­டது.

தற்­போது, விண்மீன்ட்
அப் நிறு­வ­னங்­க­ளுக்­கான ஏழு ஆண்டு சலுகை காலத்­தில், முதல் மூன்று
ஆண்­டு­க­ளுக்கு முழு வரி விலக்கு அளிக்­கப்­ப­டு­கிறது. இந்த வரம்பை, 10
ஆண்­டு­க­ளாக அதி­க­ரிப்­பது குறித்து பரி­சீ­லிக்­கப்­ப­டு­கிறது.வரும்
வாரத்­திற்­குள், புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்) நிறு­வ­னங்­க­ளுக்­கான புதிய சலு­கை­கள்
குறித்து முடிவு செய்­யப்­பட்டு, அறிக்கை வெளி­யா­கும் என, தெரி­கிறது.
புதிய விதி­மு­றை­கள், புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்) தொழிலை ஊக்­கு­வித்து, வேலை­வாய்ப்­பு­கள் உயர வழி வகுக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அந்த வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

தணிக்கை
செய்த, ஆண்டு நிதி நிலை அறிக்கை, முத­லீடு குறித்த பிர­மாண பத்­தி­ரம்,
வரு­மான வரி கணக்கு தாக்­கல் அறிக்கை ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில்,
புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்) நிறு­வ­னங்­களில் மேற்­கொள்­ளும், குறிப்­பிட்ட சத­வீத பங்கு
மூல­த­னத்­திற்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்­டும் என, வரு­மான வரி
துறை­யி­டம் வலி­யு­றுத்­தி­யுள்­ளோம்.

சச்­சின் தபா­ரியா,

நிறு­வ­னர், ‘லோக்­கல் சர்க்­கிள்ஸ்’ நிறு­வ­னம்

Source: dinamalar