Press "Enter" to skip to content

பாஜகவின் LED பல்புகளால் ஆண்டுக்கு 17,000 கோடி ரூபாய் மிச்சம் பிடித்திருக்கிறோம்..! மோடி பெருமிதம்

For Quick Alerts
Subscribe Now
 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
 

For Daily Alerts

இந்திய பெடோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தான் 13-வது சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு கூட்டத்தை தில்லியில் பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 12 வரை நடத்தி வருகிறது. இதில் மோடியும் கலந்து கொண்டு பேசி இருக்கிறார்.

இந்த மூன்று நாள் கூட்டத்தில் இந்திய கச்சா எண்ணெய் சந்தை மற்றும் கச்சா எண்ணெய் முதலீட்டாளர்கள் நட்புறவு மேம்பாட்டைக் காட்டவே இதை நடத்தி இருக்கிறார்களாம்.

உலகின் பல நாடுகளில் இருந்தும் 95-க்கும் மேற்பட்ட எண்ணெய் மற்ரும் எரிவாயுத் துறை அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள். அவர்களோடு 7000-க்கும் அதிகமான தொழிற்துறையினர்கள் மற்றும் வியாபாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

சிக்ஸர்

எடுத்த எடுப்பிலேயே மோடி இந்தியா தான் உலகின் வேகமான வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு என சிக்ஸாரோடேயே பேச்சைத் தொடங்கி இருக்கிறார். அதை பல்வேறு சர்வதேச அமைப்புகளும் ஆமோதிக்கின்றன.

உறுதி

சமீபத்தில் ஸ்டாண்டர்டு சாட்டர்டு நிதி நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதன் படி 2030-ம் ஆண்டு வாக்கில் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என கணித்திருக்கிறது. அப்போது (2030-ம் ஆண்டில்) சீனா உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாகவும், இந்தியா இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், அமெரிக்கா மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாகவும் இருக்குமெனவும் கணித்திருக்கிறது.

இப்போது இந்தியாவின் நிலை

இப்போது இந்தியா உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாகவும், உலகிலேயே வேகமாக வளரக் கூடிய பொருளாதாரமாகவும் இருக்கிறதாம். உலகப் பொருளாதாரத்தின் நங்கூரம் போல இந்தியாவின் பொருளாதாரம் இருப்பதாக பன்னாட்டு நிதியம், உலக வங்கி போன்ற நிதி அமைப்புகள் சொல்லி இருக்கின்றன. சரி மோடியின் பேச்சுக்குள் போவோம்..!

கச்சா எண்ணெய் சந்தை

பெட்ரோடெக் 2019 மாநாட்டில் பேசிய மோடி பல்வேறு பிரச்னைகளுக்கு தன் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார். கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் விலைப் பிரச்னைகளுக்கு “உலகம் முழுவதும் உள்ள கச்சா எண்ணெய் தயாரிப்பு நாடுகளும், கச்சா எண்ணெய்யை நம்பி இறக்குமதி செய்யும் நாடுகளும் வெளிப்படையாக விலை பேசி விற்க வேண்டும். அப்படிச் செய்தால் தான் மனித குலத்துக்கு எரிசக்தியைக் கொடுக்க முடியும்.

நாங்க நான்காவது

இந்தியா தான் உலகிலேயே நான்காவது பெரிய சுத்தீகரிப்பு ஆலை வசதிகளைக் கொண்ட நிறுவனம்வரும் 2030-ம் ஆண்டுக்குள் இன்னும் 200 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை சுத்தீகரிப்பு செய்யும் அளவுக்கு இந்தியா வளரும் எனவும் சொல்லி இருக்கிறார். இந்தியாவின் 11 மாநிலங்களில் அடுத்த தலைமுறை எரிபொருளை சுத்தீகரிப்பு செய்ய 12 ஆலைகள் நிறுவ இருக்கிறார்களாம்.

எரிசக்தி கொள்கைகள்

இந்தியாவின் எரிசக்தி கொள்கைகள் படி எரிசக்தியை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பது பற்றிப் பல்வேறு திட்டங்களை வகுத்திருக்கிறோம். இதன் விளைவாக இந்தியாவில் 2019-ல் அனைத்து மக்களுக்கும் மின்சாரம் சென்று சேர இருக்கிறது. அதோடு மின்சாரத்தின் உற்பத்தியை அதிகரிக்கும் நேரத்தில் மின் பகிர்மானத்தில் ஏற்படும் நட்டத்தையும் தவிர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்

உதய்

பாஜக அரசின் உதய் (UDAY) திட்டத்தால் உலக வங்கியின் ease of electricity ranking-ல் முன்னேறி இருக்கிறது. 2014-ம் ஆண்டில் இந்தியா 111-வது இடத்தில் இருந்து, 2018-ம் ஆண்டில் 29-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

உஜாலா

தங்கள் பாரதிய ஜனதா கட்சியின் UJALA திட்டத்தால் இந்தியாவின் மலிவு விலையில் எல்.இ.டி பல்புகள் கிடைக்கச் செய்திருக்கிறார்களாம். இந்த எல்.இ.டி பல்புகளால் ஆண்டுக்கு 17,000 கோடி ரூபாய் வரை மின்சாரம் மிச்சமாகி இருக்கிறதாம்.

சிலிண்டர்

இந்தியா முழுக்கம் சுத்தமான சமையல் எரிவாயுவையும் விநியோகிப்பதிலும் பாஜக தான் முன்னிலை வகித்ததாம். பாஜக பதவிக்கு வந்த பின் 6.4 கோடி குடும்பங்களுக்கு சிலிண்டர் இணைப்புக்களைக் கொடுத்திருக்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed

Source: Goodreturns

Mission News Theme by Compete Themes.