Press "Enter" to skip to content

மின்னணு பொருட்கள் தயாரிப்பு உலகளவிலான மையமாகும் இந்தியா

புது­டில்லி:மின்­னணு பொருட்­கள் ஏற்­று­ம­திக்­கான மைய­மாக இந்­தி­யாவை மாற்­று­வ­தற்­கான புதிய திட்­டங்­களை, மத்­திய அரசு அறி­மு­கம் செய்து வரு­வ­தாக, மின்­னணு மற்­றும் தக­வல் தொழில்­நுட்ப துறை­யின் செய­லர், அஜய் பிர­காஷ் ஷானி கூறி­யுள்­ளார்.
‘மின்­னணு தயா­ரிப்பு மாநாடு- – 2019’ல் பங்­கேற்று, அவர் மேலும் கூறி­ய­தா­வது:நாட்­டில், மின்­னணு பொருட்­கள் தயா­ரிப்பு தொழில் வேக­மாக வேரூன்றி வரு­கிறது. பிற நாடு­க­ளி­லி­ருந்து பல்­வேறு நிறு­வ­னங்­கள் இங்கே வந்து, ஆலை­களை அமைத்து வரு­கின்றன.அடுத்­த­கட்­ட­மாக, இந்­நி­று­வ­னங்­களின் கூட்­டா­ளி­களும் இங்கே பங்­கேற்க வந்து கொண்­டி­ருக்­கின்­ற­னர்.
எனவே, நாம் வெறு­மனே மின்­னணு பொருட்­களை தயா­ரிப்­ப­தில் மட்­டும் கவ­னம் செலுத்­தா­மல், ஏற்­று­ம­தி­யி­லும் கவ­னத்தை திருப்ப வேண்­டும். இதற்­கேற்ப, நம் புதிய திட்­டங்­கள் அனைத்­தும் ஏற்­று­ம­தியை மன­தில் கொண்டு உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்றன.
ஏற்­க­னவே, பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் புதிய பொருட்­கள், சேவை­க­ளுக்­கான வடி­வ­மைப்பு, ஆராய்ச்சி மற்­றும் மேம்­பாடு ஆகி­ய­வற்­றுக்கு, இந்­தி­யாவை பயன்­ப­டுத்த துவங்கி இருக்­கின்றன.இத்­துறை வேக­மாக வளர்ந்து வரு­கிறது; எண்­ணி­ல­டங்கா வாய்ப்­பு­களை கொண்­ட­தா­க­வும் மாறி வரு­கிறது.இந்­நி­லை­யில், வெறு­மனே அசெம்­பிள் செய்­வ­தோடு நில்­லா­மல், உல­க­ளா­விய விற்­பனை பிரி­வி­லும் முயற்­சி­கள் எடுக்க வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
மாநாட்­டில் பங்­கேற்ற, ‘மெய்ட்’ எனும் தக­வல் தொலை தொடர்பு தொழில்­நுட்ப கூட்­ட­மைப்­பின் தலை­வர், நிதின் குன்­கோ­லி­யன்­கர் கூறி­ய­தா­வது:மின்­னணு நுகர் பொருட்­க­ளுக்­கான தேவை, கடந்த காலத்­தில் பெரு­ம­ளவு உயர்ந்­துள்­ளது. ‘மேக் இன் இந்­தியா’ போன்ற திட்­டங்­கள், மின்­னணு சந்­தை­யில், இந்­தி­யாவை உல­க­ள­வி­லான ஒரு மைய­மாக மாற்ற உதவி புரிந்­துள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Source: dinamalar

More from வணிகம்More posts in வணிகம் »
Mission News Theme by Compete Themes.