Go to ...
RSS Feed

ஜன்தன் திட்டத்தின் கீழ் கடன் வாங்கியவர்களையும் MUDRA பயனாளர்களாக காட்டும் பாஜக..!


For Quick Alerts
Subscribe Now
 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
 

For Daily Alerts

டெல்லி: முத்ரா திட்டப் வலைதளத்தில் சொல்லப்பட்டிருக்கு பயனாளர்கள் விவரம் ஆண்டு வாரியாக.

ஆண்டு: 2015 – 16
எத்தனை பேருக்கு : 3,48,80,924 பேருக்கு
எவ்வளவு தொகை: 1,32,954.73 கோடி ரூபாய்

ஆண்டு: 2016 – 17
எத்தனை பேருக்கு : 3,97,01,047 பேருக்கு
எவ்வளவு தொகை: 1,75,312.13 கோடி ரூபாய்

ஆண்டு: 2017 – 18
எத்தனை பேருக்கு : 4,81,30,593 பேருக்கு
எவ்வளவு தொகை: 2,46,437.40 கோடி ரூபாய்

ஆண்டு: 2018 – 19
எத்தனை பேருக்கு : 4,36,27,690 பேருக்கு
எவ்வளவு தொகை: 2,26,502.56 கோடி ரூபாய்

Also Read | என் கணவர் என்ன தொழில் பண்றார்னு எனக்கு தெரியாது – சாந்தா கோச்சர்

முத்ரா திட்டம்

Micro Units Development & Refinance Agency என்பது தான் Mudra விரிவாக்கம். சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் தங்கள் அன்றாட வணிகம் செலவுகளில் துண்டு விழும் போது வாங்கக் கூடிய கடன் தான் இந்த முத்ரா திட்டம். அதிகபட்சமாக இந்த திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கலாம்.

வேலைவாய்ப்பு கணக்கெடுப்பு

வேலைவாய்ப்பு கணக்கெடுப்பு

கடந்த 2019 பிப்ரவரி மாதம் 27-ம் தேதி முத்ரா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் மற்றும் முத்ரா திட்டப் பயனாளர்களை கணக்கெடுத்துச் சொல்லும் படி உத்தரவிட்டது நிதி அயோக். இந்த பணியைச் செய்ய வேணிட்ய தொழிலாளர் பிரோவுக்கு (Labour Bureau).

ஜன் தன் இணைப்பு

ஜன் தன் இணைப்பு

ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குகளில் இருந்து 5,000 ரூபாய் வரை overdraft செய்து கொள்ளலாம். அப்படி ஜன் தன் கணக்கைப் பயன்படுத்தி overdraft செய்து பணத்தைப் பயன்படுத்தி இருப்பவர்களையும் வங்கிகள் முத்ரா திட்ட பயணர்களாவே கணக்கிட்டு இருக்கிறார்கள். ஜன் தன் திட்டத்தின் கீழ் மட்டும் சுமார் 34 கோடி பேர் வங்கிக் கணக்கு தொடங்கி இருக்கிறார்கள்.

உண்மைப் பயனாளர்கள்

உண்மைப் பயனாளர்கள்

வெளியாகி இருக்கும் செய்திகள் அடிப்படையில் 16.62 கோடி பேர் முத்ரா திட்டப் பயனாளர்களாக இருக்கிறார்களாம். இதில் 90 சதவிகிதத்தினர் 50,000 ரூபாய்க்குள் (முத்ரா சிசு திட்டத்தின் கீழ்) கடன் வாங்கியவர்கள். சுமார் 1.5 கோடி பேர் முத்ரா கிஷோர் திட்டத்தின் கீழ் 50,000 ரூபாய்க்கு மேல் 5 லட்சம் ரூபாய்க்குள் கடன் வாங்கி இருக்கிறார்கள். 5 லட்சம் ரூபாய்க்கு மேல் சுமார் 20 லட்சம் பேர் மட்டும் தான் கடன் வாங்கி இருக்கிறார்களாம்.

சந்தேகம்

சந்தேகம்

இந்த 16.62 கோடி பேரில் எத்தனை பேர் ஜன் தன் கணக்கு திட்டத்தின் கீழ் கடன் வாங்கியவர்கள் என்கிற கணக்கு தான் இப்போது அரசிடம் இல்லை. எனவே தான் மோடி அரசு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் கொடுத்தவர்கள் விவரத்தை இன்னும் பொதுவெளியில் விடாமல் வைத்திருக்கிறார்களாம்.

தேர்தலுக்குப் பின்

தேர்தலுக்குப் பின்

இனி சரியான முத்ரா திட்டப் பயனாளர்கள் விவரம் கிடைத்தாலும் மக்களவைத் தேர்தல் முடியும் வரை வெளியிடப் போவதில்லையாம். உண்மையாகவே முத்ரா திட்டத்தின் மூலம் பயன் அடைந்தவர்களை மட்டும் கணக்கெடுத்து மக்களவைத் தேர்தலுக்குப் பின் தான் அறிவிக்கப் போகிறார்களாம். கடந்த மார்ச் 11-ம் தேதியே தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டதால் இந்த ஒத்திவைப்பாம்.

என்.எஸ்.எஸ்.ஓ

என்.எஸ்.எஸ்.ஓ

சமீபத்தில் National Sample Survey Office (NSSO) அலுவலகம் வெளியிட வேண்டிய வேலைவாய்ப்பு தரவுகளை இன்று வரை வெளியிடாமல் இருக்கிறார்கள். இந்த National Sample Survey Office (NSSO) மேலாய்வு படி கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் 6.1 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது என வந்த தரவுகளை மறுத்திருக்கிறது மோடி அரசு.

தொழிலாளர் பீரோ

தொழிலாளர் பீரோ

அதே போல் Labour Bureau-வின் 6-வது ஆண்டு வேலைவாய்ப்பு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த மேலாய்வுவும் வெளியிடவில்லை. இந்த மேலாய்வு படி 2016 – 17-ல் இந்தியாவில் 3.9 சதவிகிதம் வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பதாகச் சொன்னது. இதையும் மோடி அரசு குறுக்கே விழுந்து தடுத்து வைத்திருக்கிறது.

மூன்றாவது அறிக்கை

மூன்றாவது அறிக்கை

இப்போது முத்ரா திட்ட பயனாளர்கள் மற்றும் முத்ரா திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு கிடைத்தவர்கள் விவரங்களோடு, ஜன்தன் திட்ட பயனாளர்களையும் சேர்த்து கணக்கிட்ட போலி விவரங்களை மக்களுக்கு பயந்து வெளியிடாமல் மறைப்பதையும் சேர்த்தால் இது பாஜக அரசில் அதிகாரபூர்வ ஆவணங்களையும் தரவுகளையும் மறைப்பது மூன்றாவது முறை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed

Source: Goodreturns