Press "Enter" to skip to content

Surf Excel மீது காட்ட வேண்டிய கடுப்பை MS Exel மீது காட்டுகிறார்கள்.

For Quick Alerts
Subscribe Now
 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
 

For Daily Alerts

முதலில் Surf Excel விளம்பரத்தைப் பார்த்து விடுங்கள்: Surf Excel விளம்பரத்தைக் காண இங்கே க்ளிக்கவும்.
https://www.youtube.com/watch?time_continue=51&v=Zq7mN8oi8ds

இந்த விளம்பரத்தில் ஒரு இந்து சிறுமி, ஒரு முஸ்லீம் சிறுவனை வழிபாட்டுக்கு அழைத்துச் செல்வது போல விளம்பரம் இருக்கிறது. இந்த விளம்பரம் வெளியான உடனேயே ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தை சமூக வலைதளத்தில் வைத்து செய்யத்தொடங்கி விட்டார்கள்.

வழக்கம் போல ஒரு #boycottsurfexcel #BoycottHindustanUnilever என ஒரு டேக்கை வைத்து இந்திய டிரெண்டே ஆக்கிவிட்டார்கள். விஷயம் இது வல்ல. இனி தான் வருகிறது.

Also Read | முத்ரா மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது..? விவரங்கள் தேர்தலுக்குப் பின் தான்..!

MS Excel-ஐ தாக்கு

இதெல்லாம் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க பலரும் “இந்து விரோதி Surf Excel ஒழிக, போய் பாகிஸ்தானில் வியாபாரம் செய்” என்கிற முழக்கத்திலேயே MS Excel மென்பொருளுக்கு ஒரு விண்மீன் மதிப்பீடுகும், கடுமையான எதிர்ப்பையும் காட்டி வருகிறார்கள்.

மத பக்தி

பலருக்கு கூகுள் ஸ்டோருக்குச் சென்று MS Excel அப்ளிகேஷனை திட்டி வருகிறார்கள். இது ஒருவர் இரண்டு பேர் அல்ல திடீரென பலரும் MS Excel செயலிக்கு ஒரு விண்மீன் கொடுத்த உடன் அனைவருமே பதறி இருக்கிறார்கள்.

மைக்ரோசாஃப்ட் அபிமானிகள்

சில மைக்ரோசாஃப்ட் அபிமானிகள் இந்த ஒரு விண்மீன் பிரச்னையில் இருந்து MS Excel-ஐ காக்க 5 விண்மீன் கொடுத்து கொஞ்சம் நிலைமையை சீராக்கி இருக்கிறார்கள். உடனடியாக பிரச்னையை புரிந்து கொண்டு கூகுள் சில முன்னேற்பாடு நடவடிக்கையை எடுத்திருக்கிறதாம்.

Snapchat Vs Snapdeal

இப்படி ஒரு நிறுவனத்துக்கு பதிலாக இன்னொரு நிறுவனத்தை தாக்குவது முதல் முறை அல்ல. கடந்த வருடம் Snapchat-ன் உயர் அதிகாரி ஒருவர் இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு நாங்கள் எங்கள் சேவையை வழங்கத் தயாரக இல்லை எனச் சொன்னதும் பலரும் Snapchat அப்ளிகேஷனை uninstall செய்யத் தொடங்கினார்கள். ஒரு பதற்றத்தில் சிலர் Snap chat-க்கு பதில் Snapdeal அப்ளிகேஷனை uninstall செய்து கலங்கடித்தார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »