Press "Enter" to skip to content

தேர்தல் டென்ஷனை விடுங்க பாஸ்.. 220 வயசு பீர்.. கேள்விப்பட்டிருக்கீங்களா.. பெல்ஜியத்தில் இருக்காம்!

உலகிலேயே பீர் தான் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு ஆல்கஹால் ஆகும். அதானாலேயே என்னவோ இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஆல்கஹால்களாலில் ஒன்றாகவும் இருக்கு. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன அப்படினா? ஏதேனும் பார்ட்டியா அல்லது விழாவா? எதும்ன்னாலும் சரி? நம்ம மக்கள் கேட்கும் ஒரு வார்த்தை மச்சி ஒரு பீர்.

ஆக இன்றைய இளைஞர்களின் வாழ்வில் அங்கம் வகிக்கும் பீருக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு தானே. அப்படிப்பட்ட குடிமக்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம் எந்த வித பக்க விளைவும் இல்லாத பாரம்பரியம் மிக்க பீர் வகை இருக்காம்.

அதுவும் இந்த கோடை காலத்துல கிடைச்சா? இப்போதைக்கு இந்த மொக்க பீர்களே கலக்கல விற்பனை ஆகும்போது, வரப்போற இந்த புது பீர் லெவலே வேறதான். இங்கயே இப்படின்னா? நம்மை விட அன்னிய நாடுகளில் இது ஒரு பொழுது போக்கு அம்சமாகவே கருதப்படுகிறது.

அதிலும் பெண்கள் ஆண்கள் என இருபாலரும் அமர்ந்து பீயர் குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. எனினும் இந்தியாவை விட மற்ற நாடுகளில் தரத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது பிச்சுக்கிட்டு போகாது? சரி வரட்டும் பார்க்கலாம்.

பெல்ஜியத்தியல் இது குறித்து பல ஆராய்ச்சியே நடத்தப்படுகிறதாம். இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்ன பெல்ஜியத்தில் இதுவரை சுமார் 1000 வகையான பீர்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்தும் வருகின்றன. அதிலும் இப்ப அறிமுக படுத்த இருக்கிற இந்த பீர் பெல்ஜியத்தின் 220 வருட பழைமையான கண்பிடிப்பாம். இப்ப அதான் உற்பத்தி செய்ய போறாங்களாம். அதுதான் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

ஆமாங்க 1975 ஆம் ஆண்டு கிரிம் பெர்கன் அபேய்ன் மதுபானம், பிரெஞ்சு துருப்புகளால் சூறையாடப்பட்டதாம். இந்த நிலையில் அந்த வகையான புனிதமான பீரை, தற்போது பல ஆராய்ச்சிக்கு பின் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாம்.

அதிலும் 12-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த பீர் வகைகளை பல ஆய்வுக்கு பின்னர் கடந்த திங்கட் கிழமையன்று தான் அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளதாம் இதை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு. அதோடு இந்த பீர் உற்பத்தி வரும் 2020 ஆண்டின் பிற்பகுதியில் 10.8 சதவிகிதம் வரை தயாரிக்க முடியும் நம்புகிறார்களாம் இந்த குடிமக்கள்.

இதற்காக அவர்கள் மிகவும் பெருமையும் பட்டுக்கொள்கிறார்களாம். ஏனெனில் நமது அப்பா தாத்தா கால மது பான வகைகள் மிக பிரசித்தி பெற்றவை, அதிலும் மருத்துவ குணமும், நல்ல தரமான சுவையும் உடையது என் கிறார்களாம்

அதிலும் கரேல் ஸ்டூடீமாஸ் என்ற துறவி இது அபெயின் இந்த மங்குகள் மரபு வழியாக வந்த பாரம்பரியம் மிக்க பீர்கள் என பெருமை கொடுள்ளனராம்.

அதோடு எங்கள் ஊரில் பீர் வகைகள் மட்டும் அல்ல, பெல்ஜியம் சாக்லேட்களும் ரெம்ப பிரபலமான தெரியுமா? அதிலும் வருடத்திற்கு சுமார் 2,20,000 டன் சாக்லேட்கள் உற்பத்தி செய்யப்படுகிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

Mission News Theme by Compete Themes.