மீண்டும் 37,000 புள்ளிகளுக்குக் கீழ் நிறைவடைந்த sensex!எப்போது தான் முன்னேறும்..?

 

 

மும்பை: சென்செக்ஸ் தன் 37,000 என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸுக்குக் கீழ் நிறைவடைவது, வரவு செலவுத் திட்டம்டுக்குப் பின் இது நான்காவது முறை. சென்செக்ஸ் டே சார்ட்டில் மார்ச் 11, 2019 முதல் பாட்டமாகவும், மே 14, 2019 இரண்டாவது பாட்டமாகவும், ஆகஸ்ட் 01, 2019 மூன்றாவது பாட்டமாகவும் அமைந்திருப்பதை பார்க்க முடிகிறது. எனவே வலுவான சப்போர்ட் என்றால் 37,000 தான் ட்ரிபிள் பாட்டமாக நிற்கிறது. ஆக டபுள் டாப்களில் 18 ஏப்ரல் 2019 அன்று சென்செக்ஸ் தொட்ட 39,420 முதல் முதன்மையான புள்ளியாகவும், ஜூன் 03, 2019 40,267 புள்ளிகள் இரண்டாவது மற்றும் பெரிய டாப்பாகவும் அமைந்திருக்கிறது எனச் சொல்லி இருந்தோம்.

எனவே சென்செக்ஸ் தன் 37,000 என்கிற வலுவான சப்போர்ட் புள்ளிகளை உடைத்தால் சுமார் 1,210 புள்ளிகள் வரை சரிந்து 35,790 வரை தொடலாம். எனவே 37,000 என்கிற சப்போர்ட் உடைபட்டால் 36,590 தான் முதல் மற்றும் வலுவான சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அதை சென்செக்ஸ் வாராந்திர சார்ட்டும் உறுதி செய்கிறது. அப்படி அதுவும் உடைபட்டால் 36,000 புள்ளிகள் தான் அடுத்த மிக மிக வலுவான சப்போர்ட்டாக கண்ணில் படுகிறது எனவும் குறிப்பிட்டு இருந்தோம். இந்த சப்போர்ட் புள்ளிகளை அப்படியே வைத்துக் கொள்வோம்.

imageநாங்கள் இந்தியாவைச் வர்த்தகம் செய்ய சிறந்த இடமாக மாற்றுவோம்.. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி!

இன்று மீண்டும் சென்செக்ஸ் தன் 37,000 புள்ளிகளில் பலப் பரிட்சை நடத்தி இருக்கிறது. எனவே 37,000 புள்ளிகள் என்பது சென்செக்ஸின் வலுவான சப்போர்ட் என மீண்டும் உறுதியாகி இருக்கிறது. ஒருவேளை சந்தை நாளை ஏற்றம் காணத் தொடங்கினால் முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக 37,000 புள்ளிகளைக் கடக்க வேண்டி இருக்கும். அதன் பின் தான் பழைய 37,410 புள்ளிகளைக் கடக்க வேண்டி இருக்கிறது. ஆகவே இந்த இரண்டு புள்ளிகளையும் ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம்.

இன்று காலை சென்செக்ஸ் 37,755 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இறக்கம் கண்டு 36,958 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 623 புள்ளிகள் அதிகம் சரிந்திருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 11,139 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 10,933 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 183 புள்ளிகள் அதிக இறக்கம் கண்டிருக்கிறது.

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 03 பங்குகள் ஏற்றத்திலும், 27 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 05 பங்குகள் ஏற்றத்திலும், 44 பங்குகள் இறக்கத்திலும், ஒரு பங்கு மாற்றாமின்றியும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,661 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 861 பங்குகள் ஏற்றத்திலும், 1,652 பங்குகள் இறக்கத்திலும், 148 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,661 பங்குகளில் 20 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 251 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில், பெரும்பாலான துறை சார் இண்டெக்ஸ்கள் இறக்கத்தில் வர்த்தகமாயின. எனர்ஜி துறை சார் இண்டெக்ஸ் மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமானது. ஆட்டோமொபைல், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின.

ரிலையன்ஸ், யெஸ் பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஹெச் டி எஃப் சி போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

இந்தியா புல்ஸ் ஹவுசிங், ரிலையன்ஸ், சன் பார்மா, கெயில், ஹிண்டால்கோ போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. யெஸ் பேங்க், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, யூ பி எல், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் போன்ற நிறுவனப் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.24-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 58.62 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns