விழாக்கால கணினிமய விற்பனை அபார உயர்வு

புதுடெல்லி: விழாக்கால விற்பனை திருவிழாவில் கணினிமய நிறுவனங்களின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.  தசரா,  தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை பருவம் வருவதை கருத்தில் கொண்டு அமேசான்  உள்ளிட்ட கணினிமய நிறுவனங்கள் 5 முதல் 6 நாட்கள் அதிரடி தள்ளுபடி விற்பனையை  அறிவித்தன. விழாக்கால  சிறப்பு சலுகை, எக்ஸ்சேஞ்ச் ஆபர்களால் விற்பனை அமோகமாக இருந்தது.

இதன் விற்பனை நிலவரம் குறித்து ஆய்வு நடத்திய ஒரு நிறுவனம், 300  கோடி (சுமார் 21,300 கோடி) டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது என  தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 30 சதவீதம் அதிகம். கணினிமய  விற்பனையில் 45 சதவீத சந்தை பங்களிப்புடன் அமேசான் முதலிடத்தில் உள்ளது.  அமேசான் மற்றும் பிளிப்கார்ட் விற்பனை கடந்த ஆண்டை விட 30 சதவீதம்  உயர்ந்துள்ளது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Source: dinakaran