ஜியோ புதிய கட்டணம் பி.எஸ்.என்.எல்., குஷி

ஜியோ புதிய கட்டணம் பி.எஸ்.என்.எல்., குஷி

கோல்கட்டா:ஜியோவின் சமீபத்திய கட்டண அறிவிப்புக்குப் பின், அதிக சந்தை பங்களிப்பை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் எதிர்பார்க்கிறது.

சமீபத்தில், ஜியோ நிறுவனம், அதன் வாடிக்கையாளர்கள் பிற நிறுவனங்களின் தொலைபேசிகளுக்கு அழைப்புகளை மேற்கொண்டால், நிமிடத்திற்கு, 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தது.இந்த அறிவிப்பு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:ஜியோவின் புதிய கட்டண விதிப்பு, எங்களுக்கு சாதகமாக அமையும் என கருதுகிறோம். மேலும், ‘4ஜி’ அலைவரிசையும் விரைவில் கிடைக்கும் என கருதுகிறோம். இத்தகைய காரணங்களால், எங்கள் சந்தை பங்களிப்பு, 3 முதல், 4 சதவீதம் வரை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால், எங்களுடைய சந்தை பங்களிப்பு, 6 சதவீதமாக உள்ளது. இது, 10 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

தேசிய அளவில், 12 சதவீதமாக அதிகரிக்கும் என கருதுகிறோம்.சமீபத்திய நிகழ்வுகள், எங்களுக்கு வளர்ச்சி வேகத்தை அதிகரித்து, அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்கள் சேர்வதற்கு வழிவகுக்கும் என கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Source: dinamalar

Author Image
Agamagizhan R