Press "Enter" to skip to content

இலக்குக்கு கீழ் தான் ஜிஸ்டி வசூல்..! சரி செய்யத் தவிக்கும் மத்திய அரசு..! 12 பேர் கொண்ட குழு தீவிரம்

டெல்லி: மத்திய அரசின் மிகப் பெரிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி , கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விட குறைவாகவே வசூல் ஆகிக் கொண்டு இருக்கிறது.

இந்தியாவின் மறைமுக வரியான ஜிஎஸ்டியின் சர்வ அதிகாரம் பொருந்திய அமைப்பாக இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில், கடந்த அக்டோபர் 10, 2019 வியாழக்கிழமை அன்று 12 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து இருக்கிறார்கள்.

ஏன் இந்த திடீர் 12 பேர் கொண்ட குழு..? இந்த 12 பேர் கொண்ட குழுவுக்கும், நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய சர்ச்சைப் பேச்சுக்கும் என்ன தொடர்பு..? வாருங்கள் அந்த 12 பேர் குழுவில் இருந்தே தொடங்குவோம்.

12 பேர் குழுவின் வேலை

இந்த 12 பேரும் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளாம். இவர்கள் ஜிஎஸ்டி வரி வசூலை அதிகரிப்பது, ஜிஎஸ்டி முறைகேடுகள் நடக்காமல் தவிர்ப்பது, அதிக வியாபாரிகளை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது, ஏற்கனவே பதிவு செய்திருப்பவர்களை முறையாக ஜிஎஸ்டி செலுத்த வைப்பது போன்றவைகளை கலந்து ஆலோசிக்க இருப்பதாகச் சொன்னார்கள். இந்த குழு ஜிஎஸ்டி வரி விகிதங்களை உயர்த்துவதைத் தவிர மற்ற வழிகளை எல்லாம் ஆலோசிப்பார்களாம்.

என்ன பயன்

ஜிஎஸ்டி சட்டங்களை தேவைக்கு தகுந்தாற் போலவும், மேலே சொன்ன எதார்த்த சிக்கல்களை சரி செய்யவும், திருத்தங்களை மேற்கொள்ளாமல், நேரடியாக ஜிஎஸ்டி வரி வசூலை மட்டும் அதிகரிக்க 12 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைத்து யாருக்கு என்ன பயன்..? ஒரு குழந்தைக்கு பசி எடுக்கிறது என்றால், அது தன் தாயிடம் தான் சென்று சோறு கேட்கும். இங்கு ஜிஎஸ்டியால் சிரமப்படும் வியாபாரிகள், நிதி அமைச்சரிடம் தான் வேண்டு கோள் வைக்க முடியும். அதை தான் அவர்களும் செய்கிறார்கள்.

முடிவுகள்

முடிவுகள்

எப்படியாவது இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று நினைக்கும் அமைச்சர்கள், கொஞ்சம் வியாபாரிகளின் ஜிஎஸ்டி சிரமங்களையும் புரிந்து கொண்டு அதை சரி செய்ய நடவடிக்கை எடுங்கள். தயவு செய்து “ஜிஎஸ்டியில் தவறு இருக்கலாம். அதனால் உங்களுக்கு சிரமம் கூட ஏற்படலாம், ஆனால் அது தான் நம் சட்டம்” எனச் சொல்லாதீர்கள். நீங்கள் வளர்க்க நினைக்கும் பொருளாதாரத்தின் ஒரு பெரும்பகுதி இந்த சில்லறை வியாபாரிகள் தான். இவர்களுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் நல்ல முடிவை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம். நம்புவோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

Mission News Theme by Compete Themes.