39% வீழ்ச்சி கண்ட மாருதி சுசூகியின் நிகரலாபம்.. விற்பனை மந்தமே காரணம்..!

39% வீழ்ச்சி கண்ட மாருதி சுசூகியின் நிகரலாபம்.. விற்பனை மந்தமே காரணம்..!

 

 

டெல்லி: மாருதி சுசூகி நிறுவனத்தின் நிகரலாபம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 39.35 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 1,358.60 கோடி ரூபாயாக பதிவு செய்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு நிதியாண்டில் இந்த நிறுவனம் வெறும் 1,358.60 கோடி ரூபாயை மட்டுமே நிகரலாபமாக சந்தித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 2,240.4 கோடி ரூபாயாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமே வாகன விற்பனை சரிவு தான் என்று கூறப்படும் நிலையில், இதன் கடந்த ஜூலை – செப்டம்பர் 2019 நிகர வாகன விற்பனை வருவாய் 22.50 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 16,120 கோடி ரூபாயாக சரிந்துள்ளதாகவும், இதே கடந்த ஜூலை – செப்டம்பர் 2018ல் 21,551 கோடி ரூபாயாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதே வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் விற்பனை 30.2 சதவிகிதம் குறைந்து, சுமார் 3,38,317 யூனிட்களாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் குறைந்த வாகன விற்பனை, விற்பனையை அதிகரிக்கப்பதற்கான ஊக்குவிப்பு செலவுகள் மற்றும் தேய்மான செலவுகள் என செலவினங்கள் அதிகரிப்பு காரணமாக நஷ்டம் அதிகரித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், விற்பனையும் வெகுவாக சரிந்துள்ளது மேலும் நஷ்டத்திற்கு வழி வகுத்துள்ளதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் நடப்பு ஆண்டில் ஆட்டோமொபைல் துறை பல காரணங்களால் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது. அதிலும் வரவிருக்கும் பிஎஸ் 6 விதிமுறைகளை அடுத்து, செலவினங்கள் அதிகரிப்பு, குறிப்பாக வாகன காப்பீடு செலவினங்கள் அதிகரிப்பு மற்றும் பல மாநிலங்களில் சாலை வரி உயர்வு உள்ளிட்டவற்றால் இன்னும் செலவினங்கள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் வாகன விற்பனை சரிந்துள்ளதாகவும் மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.

இது குறித்து மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி பார்கவா கூறுகையில், பண்டிகை காலம் தொடங்கியதிலிருந்தே இந்த நிறுவனம் மிகப்பெரிய சலுகைகளை வழங்கி வருவதாகவும் கூறியுள்ளார். எனினும் ஒரு திருப்புமுனை எப்போது நிகழக்கூடும், எப்போது எங்கள் லாபம் எட்டப்படும் என்றும், இதை கணித்து சொல்ல எனக்கு ஒரு படிக பந்து தேவைப்படுகிறது. ஆனால் துரதிஷ்டவசமாக என்னிடம் அந்த வகையான பந்து இல்லை என்றும் நகைச்சுவையாக பார்கவா கூறியுள்ளார். மேலும் சந்தையில் ஏதேனும் திருப்பு முனை இருக்கிறதா என்பதற்கு, அது எப்போது வேண்டுமானலும் விரைவில் வரலாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் நாங்கள் காத்திருப்போம், அடுத்த சில மாதங்களில் திருப்பு முனை இருக்கும் என்று நாம் நம்புகிறேன் என்றும் பார்கவா கூறியுள்ளார்.

இந்திய பொருளாதாரத்தில் உற்பத்தி தொழிலில் கார்கள் உற்பத்தி ஒரு முக்கிய பகுதியாகும். இந்த நிலையில் எந்தவொரு நிறுவனமும் ஜிஎஸ்டியால் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்தால், இதன் காரணமாக மத்திய மாநில அரசுகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். இது தவிர நிறைய வேலை இழப்புகளும் ஏற்படும் என்றும் பார்கவா கூறியுள்ளார். மேலும் தற்போது இந்தியாவில் வாகன தொழிலால் மட்டுமே அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்க முடியும் என்றும் பார்கவா கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது மாருதி சுசூகி நிறுவனத்தின் பங்கு விலை 53 ரூபாய் அதிகரித்து, 7,445 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

Author Image
murugan