Press "Enter" to skip to content

பழைய கொள்கைகளை புதுப்பிக்கும் வசதி

பிரீமி­யம் தொகை செலுத்­தாமல், காலா­வ­தி­யாகி இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மேலான பாலி­சி­க­ளை­யும் புதுப்­பித்­துக் ­கொள்­ளும் வாய்ப்பை, எல்.ஐ.சி., நிறு­வ­னம் வழங்­கு­கிறது.

உரிய நேரத்­தில், பிரீமி­யம் தொகை செலுத்­தப்­ப­ட­வில்லை எனில், கொள்கை காலா­வ­தி­யா­கி­விடும். இவ்­வாறு காலா­வ­தி­யான பாலி­சி­களை, அப­ரா­தத்­து­டன் பிரி­மி­யம் தொகை செலுத்தி, புதுப்­பித்­துக் ­கொள்­ள­லாம்.எனி­னும், கடை­சி­யாக பிரீமி­யம் தொகை செலுத்­திய இரண்டு ஆண்­டு­க­ளுக்­குள் பாலி­சியை புதுப்­பித்­துக் ­கொள்ள வேண்­டும்.

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மேல் ஆகி­விட்­டால், புதுப்­பித்­துக்­கொள்­வது சாத்­தி­யம் இல்லை. 2014ம் ஆண்­டுக்கு பின்எடுக்­கப்­பட்ட பாலி­சி­க­ளுக்கு இது பொருந்­தும். இந்­நி­லை­யில், காலா­வ­தி­யாகி இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மேலான பாலி­சி­க­ளை­யும் புதுப்­பித்­துக்­கொள்­ள­லாம் என, ஆயுள் காப்­பீட்­டுக் ­க­ழ­க­மான எல்.ஐ.சி., அண்­மை­யில் அறி­வித்­துள்­ளது.

காலா­வ­தி­யாகி இரண்டு ஆண்­டு­ க­ளுக்கு மேல் ஆன, இதற்கு முன் புதுப்­பித்­துக் ­கொள்ள
அனு­மதி அளிக்­கப்­ப­டாத பாலி­சி­களையும் புதுப்­பித்­துக் ­கொள்­ள­லாம் என்று, எல்.ஐ.சி.,
தெரி­வித்­துள்­ளது.இதை­ய­டுத்து, 2014க்கு பின் எடுக்­கப்­பட்ட பாலி­சி­களை, பிரீ­மி­யம் செலுத்த தவ­றி­ய­தில் இருந்து, ஐந்து ஆண்­டு­க­ளுக்­குள் புதுப்­பித்­துக் ­கொள்­ள­லாம்.யூலிப் வகை பாலி­சி­கள் என்­றால், மூன்று ஆண்­டு­க­ளுக்­குள் புதுப்­பித்­துக்­கொள்ள வேண்­டும்.

Source: dinamalar

More from வணிகம்More posts in வணிகம் »
Mission News Theme by Compete Themes.