தீவிரவாதத்தால் உலகப் பொருளாதாரத்திற்கு $1டிரில்லியன் நஷ்டம்.. பிரதமர் மோடி கருத்து..!

தீவிரவாதத்தால் உலகப் பொருளாதாரத்திற்கு $1டிரில்லியன் நஷ்டம்.. பிரதமர் மோடி கருத்து..!

 

 

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் 11-ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரேசில் சென்றிருந்தார். பிரேசிலில் பிரேசிலியா நகரில் நடைபெற்ற இந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு அங்கு உரையாற்றினார்.

இந்த பிரிக்ஸ் நாடுகளின் தொழில் துறை தலைவர்கள் மாநாட்டில் பேசிய மோடி, உலகிலேயே முதலீட்டுக்கு உகந்த சூழல் இந்தியாவில் நிலவி வருவதாகவும், இதனால் பிரிக்ஸ் நாடுகள் இந்தியவில் தங்களது முதலீடுகளை செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இதைத்தொடர்ந்து, பிரேசிலியாவின் பழமையான இட்டாமராடி அரண்மனையில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார். அக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மோடி, உலகின் பொருளாதார வளர்ச்சிக்கு தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் உலகப் பொருளாதாரத்திற்கு தீவிரவாதத்தால் 71 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறியுள்ளார்.

ஆக உலகிற்கு தீவிரவாதத்தால் ஏற்பட்டுள்ள இந்த ஒரு டிரில்லியன் பொருளாதார லட்சம் கோடி ரூபாயை ஈடு செய்ய வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும் தீவிரவாதத்தால் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவிகிதம் குறைந்துள்ளதாக மோடி மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் பயங்கரவாதத்தால் 2.25 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

The BRICS Summit in Brazil has been a very productive one. We had fruitful dialogues on cementing ties in trade, innovation, technology and culture.

The focus on futuristic subjects will surely lead to deeper cooperation that will benefit the people of our respective nations. pic.twitter.com/nyLXRCX7J3

— Narendra Modi (@narendramodi)

November 14, 2019

இது தவிர உலகளவிலான வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தகம் வெறும் 15 சதவிகிதம் மட்டுமே பங்கு வகிக்கிறது என்றும் மோடி தெரிவித்துள்ளார். மேலும் இதை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாடு மிகவும் பயனுள்ள ஒன்றாகும். இது வர்த்தகம், புதுமை, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் உறவுகளை உறுதிப்படுத்துவது குறித்து பலனளிக்கும் உரையாடல்கள் இருந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார். .

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

Author Image
murugan