40,350-ஐக் கடந்த சென்செக்ஸ்..! நிலைத்து நின்ற நிஃப்டி..!

 

 

சந்தை சம்பந்தமாக அதிகம் பாதிக்கக் கூடிய ஜிடிபி தரவுகள், மூடிஸ் மதிப்பீடுகள், தொழில் துறை உற்பத்தி என பல செய்திகள் வந்தன. ஆனால் எந்த செய்தியும் சந்தையை அதிகம் பாதிக்கவில்லை. இன்று சென்செக்ஸ் அதிக ஏற்றம் காணாமல் சுமாராக ஏற்றம் கண்டு நிறைவடைந்து இருக்கிறது.

ஒரு வேளை சந்தை நாளையும் ஏதாவது நல்ல செய்தி வந்து ஏற்றம் கண்டால் வழக்கம் போல 40,500 முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு 40,650-ஐ அடுத்த ரெசிஸ்டென்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.

கடந்த வாரத்திலேயே, சென்செக்ஸ் டே சார்ட்டில் இந்த ஏற்ற டிரெண்டு முடிந்ததைக் குறிப்பிட்டு இருந்தோம். நவம்பர் 07 கேண்டில் சார்ட் ஒரு ஹேங்கிங் மேன் பேட்டனைக் காட்டுகிறது. அதோடு அதற்கு முந்தைய நவம்பர் 06 அன்றைய குளோசிங் புள்ளியை உடைத்துக் கொண்டு, அதன் ஓப்பனிங் புள்ளிகளைத் தொட்டு நவம்பர் 07 அன்று சந்தை வர்த்தகம் ஆகி இருந்த்து. எனவே அடுத்து வரும் நாட்களில் சந்தை ஏற்றம் காண்பது கொஞ்சம் கடினம் தான் எனச் சொல்லி இருந்தோம்.

சொன்னது போலவே, சந்தை கடந்த நவம்பர் 08 முதல் இன்று வரை இறங்கிக் கொண்டு இருக்கிறது. இன்று சென்செக்ஸ் ஏற்றம் கண்டாலும் போக்கை மாற்றும் விதத்தில் தன் முந்தைய நாளின் குளோசிங் புள்ளியை விட கூடுதலாக ஏற்றம் கண்டு நிறைவடைந்தாலும், சார்ட் பேட்டன் படிப் பார்த்தால், சந்தை இன்னும் இறக்க டிரெண்டில் இருப்பதாகவே தெரிகிறது. எனவே இன்னும் இறக்க மிகுதியாக பகிரப்பட்டது சென்செக்ஸில் இருப்பதையே இது காட்டுகிறது.

நாளை ஏதாவது கெட்ட செய்தி வந்து, சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் முன்பே சொன்னது போல 40,125 முதல் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பின், அடுத்த வலுவான சப்போர்ட்டாக 40,000 புள்ளிகளை எடுத்துக் கொள்ளலாம்.

நேற்று மாலை சென்செக்ஸ் 40,286 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,408 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,356 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 70 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.

இன்று காலை நிஃப்டி 11,904 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,895 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 23 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 11 பங்குகள் ஏற்றத்திலும், 19 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,764 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,136 ஏற்றத்திலும், 1,466 பங்குகள் இறக்கத்திலும், 162 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,764 பங்குகளில் 61 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 171 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

பார்தி ஏர்டெல், பார்தி இன்ஃப்ராடெல், எஸ்பிஐ, க்ராசிம், சிப்லா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. இந்தியன் ஆயில், ஹிரோ மோட்டோகார்ப், பாரத் பெட்ரோலியம், மாருதி சுசூகி, வேதாந்தா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns