40,650-ல் நிலை கொண்ட சென்செக்ஸ்! 12,000-த்துக்கு கீழ் நிறைவடைந்த நிஃப்டி!

 

 

இந்தியப் பொருளாதார வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் ஜிடிபி 4.5 % தான் வளர்ச்சி கண்டு இருக்கிறது என்கிற செய்திக்கு நேற்று இந்திய சந்தைகள் பெரிதாக ஏற்ற இறக்கங்களைக் காட்ட வில்லை. ஆனால் இன்று அந்த செய்திகளுடன் மற்ற சில கெட்ட செய்திகளும் சேர்ந்து கொண்ட உடன் வேலையைக் காட்டத் துவங்கி இருக்கிறது.

ஒபெக் நாடுகள், எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக் கொள்ள சம்மதித்து இருப்பதால் கச்சா எண்ணெய் விலை கொஞ்சம் அதிகரித்து இருப்பது, இந்திய வங்கிகளுக்கு கூடுதலாக 7 பில்லியன் டாலர் முதலீடு தேவை என ஃபிட்ச் மதிப்பீடு நிறுவனம் கணித்து இருப்பது, பெரும்பாலான ஆசியச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமானது, ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது, நேற்று அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது என பல காரணங்களும் இன்றைய சந்தையின் இறக்கத்துக்கு காரணமாக இருக்கிறது.

நாம் ஏற்கனவே சொன்னது போல, சென்செக்ஸ் டே சார்ட் பேட்டனில் 28 நவம்பர் 2019 அன்றைக்கு, ஒரு மிக சரியான ஹேமர் பேட்டன் உருவானதால், 41,000 ஒரு வலுவான சப்போர்ட்டாகத் தெரியவில்லை எனச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே நவம்பர் 29க்கான சார்ட்டில் 41,000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் நிறைவடையவில்லை.

அதோடு 40,650-ஐ சப்போர்ட் எடுத்து சென்செக்ஸ் வர்த்தகமாகலாம் எனவும் கணித்து இருந்தோம். அதே போல இன்று சென்செக்ஸ் 40,650-ஐ சப்போர்ட் எடுத்து 40,675-க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

ஒருவேளை சந்தை நாளை, ஏதாவது நல்ல செய்தி வந்து ஏற்றம் கண்டால், 40,850 முதல் ரெசிஸ்டென்ஸாக இருக்கும். 41,000 அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும்.

நுட்பம்கலாக, சென்செக்ஸின் டே சார்ட்டில், எலியட் வேவ் தியரி படி பார்த்தால் இப்போது இறக்க டிரெண்டு தான் தொடர்கிறது. எனவே தற்போதைய சூழலில் சந்தை மேலும் இறக்கம் காணத் தொடங்கினால் 40,500 புள்ளிகளை முதல் சப்போட்டாக வைத்துக் கொள்வோம். 40,125 புள்ளிகளை அடுத்த வலுவான சப்போட்டாக வைத்துக் கொள்வோம். ஏதாவது நல்ல செய்தி வந்து ஒரு நல்ல ஏற்றம் காணவில்லை என்றால்… சென்செக்ஸ் 40,000 புள்ளிகளைக் கூட தொடலாம்.

நேற்று மாலை சென்செக்ஸ் 40,802 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,852 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,675 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 126 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது.

இன்று காலை நிஃப்டி 12,067 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,994 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 54 புள்ளி இறக்கம் கண்டு இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 09 பங்குகள் ஏற்றத்திலும், 21 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,674 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 868 பங்குகள் ஏற்றத்திலும், 1,603 பங்குகள் இறக்கத்திலும், 203 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,674 பங்குகளில் 32 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 154 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபின்சர்வ், டிசிஎஸ், கோட்டக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், பார்தி இன்ஃப்ராடெல், டாடா ஸ்டீல், ஜி எண்டர்டெயின்மெண்ட், அதானி போர்ட்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns