யார் இந்த அம்ரபாலி..! அம்ரபாலிக்கும் தோனியை Accused ஆக சேர்க்க சொல்வதற்கும் என்ன தொடர்பு..!

 

 

2011 உலக கோப்பை நாயககனாக வலம் வந்து, இந்தியாவின் நண்டு சிண்டுகள் தொடங்கி, பெரியவர்கள் வரை அனைவரையும் வளைத்துப் போட்ட மந்திரச் சொல் தோனி.

தி கேப்டன் கூல். இந்திய அணி எத்தனை கடினமான சூழலில் இருந்தால் முகத்தில் அந்த புன் சிரிப்பு மாறவே மாறாது.

தோனி = கிரிக்கெட் என்று இருந்த மனிதரை, இப்போது பல கிரிக்கெட் பிரனைகள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. வழக்கம் போல சிரித்த முகத்தோடு கடந்து போகிறார்.

தோனிக்கு சிக்கல்

கிரிக்கெட் பிரச்னைகளைத் தாண்டி, இப்போது கார்ப்பரேட் பிரச்னைகளும் இவரைத் துரத்தத் தொடங்கி இருக்கிறது. இந்த கார்ப்பரேட் பிரச்னையில், மஹேந்ந்திர சிங் தோனியையே மோசடி வழக்கும் Accused- ஆகச் சேர்க்கச் சொல்கிறார்கள் வீடு வாங்க பணம் கொடுத்தவர்கள். அப்படி என்ன பிரச்னை..? வாங்கள் விரிவாகப் பார்ப்போம்.

தோனிக்கு சிக்கல்

கிரிக்கெட் பிரச்னைகளைத் தாண்டி, இப்போது கார்ப்பரேட் பிரச்னைகளும் இவரைத் துரத்தத் தொடங்கி இருக்கிறது. இந்த கார்ப்பரேட் பிரச்னையில், மஹேந்ந்திர சிங் தோனியையே மோசடி வழக்கும் Accused- ஆகச் சேர்க்கச் சொல்கிறார்கள் வீடு வாங்க பணம் கொடுத்தவர்கள். அப்படி என்ன பிரச்னை..? வாங்கள் விரிவாகப் பார்ப்போம்.

அம்ரபாலி

அம்ரபாலி

கடந்த 2003-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அம்ரபாலி குழுமம் (Amrapali Group), அனில் குமார் தலைமையில் நிதானமாக வளர்ந்தது. 2010-ம் ஆண்டு வாக்கில், வட இந்தியாவின் நம்பகமான பெரிய ரியல் எஸ்டேட் பில்டர்களில் ஒரு நிறுவனமாகவும் பெயர் எடுத்தது. இதற்கு அனில் குமார் ஒரு ஐஐடி பட்டதாரி என்பதும் முக்கிய காரணம்.

வளர்ச்சி

வளர்ச்சி

ஒரு பக்கம் ரியல் எஸ்டேட் வளர்ந்து கொண்டிருக்க… மறு பக்கம் அம்ரபாலி குழுமம் தன் வியாபாரத்தை மற்ற துறைகளில் பரப்பிக் கொண்டு இருந்தது. அம்ரபாலி மெல்ல மெல்ல கல்வி, பொழுது போக்கு, எஃப் எம் சி ஜி, ஹோட்டல் என வியாபார சாம்ராஜ்யமாக வளர்ந்து விட்டது.

தோனி வருகை

தோனி வருகை

அம்ரபாலி ரியல் எஸ்டேட் நிறுவனம், நம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கூல் மஹேந்திர சிங் தோனியை தன் விளம்பர தூதராக நியமித்துக் கொண்டு வியாபாரம் செய்தது. இந்திய கிரிக்கெட்டின் முகமாக இருந்த தோனி + ஐஐடி பட்டதாரி அனில் குமார் காம்பினேஷன் மிகச்சரியாகக பொருந்தியது. வீடு வாங்க மக்கள் பணத்தை கொட்டினார்கள்.

மோசடி

மோசடி

அம்ரபாலி நிறுவனம் தோனியின் முகத்தை வைத்து பல வீடுகளை கட்டிக் கொடுப்பதாக, பலரிடமும் பணத்தை வாங்கிவிட்டது. ஆனால் வீடுகளைச் சொன்ன நேரத்தில் கட்டிக் கொடுக்கவில்லை. அதாவது அங்கு வீடே இல்லை. வீடு வாங்க பணம் கொடுத்தவர்கள் கேட்டால் வழக்கம் போல் சப்பை கட்டு தான் பதில்.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

ஜூலை 2018-ல் அம்ரபாலி குழுமம் வீடு கட்டிக் கொடுக்காத வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது தான் வீடு கட்டித் தருவதாகச் சொல்லி வாங்கிய பணத்தை எல்லாம் வேறு ஏதேதோ வியாபாரங்களுக்கு மடை மாற்றி பயன்படுத்திய மோசடிகள் வெளியே தெரிய வந்தன.

சிறை

சிறை

நொய்டா, க்ரேட்டர் நொய்டா பகுதிகளில் சுமார் 42,000 பேர் வீடு வாங்க கொடுத்த பணத்தை, அம்ரபாலி நிறுவனம் ஏமாற்றிய விவரங்களைக் கண்ட உச்ச நீதிமன்றம், அம்ரபாலி குழுமத்தின் முதன்மை நிர்வாக இயக்குநர் மற்றும் சில இயக்குநர்களைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

புகார்

புகார்

O2 Valley,

La Residentia,

Silicon City,

Crystal Homes,

Leisure Valley,

Adarsh Awas Yojna,

Kingswood என பல திட்டங்களில் வீடு வாங்க பணம் கொடுத்தவர்கள், கடந்த ஜூலை 2018 முதல் இன்று வரை தனித் தனியாக புகார் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ரூபேஷ் குமார்

ரூபேஷ் குமார்

சமீபத்தில், கடந்த நவம்பர் 27, 2019 அன்று ஒரு புகாரை ரூபேஷ் குமார் என்பவர் டெல்லி பொருளாதார குற்றப் பிரிவில் ஒரு முதல் தகவல் அறிக்கையை சமர்பிக்கிறார். அதில், சுமார் 2,647 கோடி ரூபாயை அம்ரபாலி நிறுவனம் மோசடி செய்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.

குற்றம் சுமத்தபட்டவர்கள்

குற்றம் சுமத்தபட்டவர்கள்

இந்த முதல் தகவல் அறிக்கையில் அம்ரபாலி குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனில் குமார், ஷிவ் ப்ரியா, மோஹித் என பல அம்ரபாலி நிறுவன உயர் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி இருக்கிறார்கள். இந்த வரிசையில் தான் தோனியின் பெயரையும் சேர்க்கச் சொல்லிக் கேட்டு இருக்கிறது ரூபேஷ் குமாரின் முதல் தகவல் அறிக்கை.

தோனி

தோனி

அம்ரபாலி நிறுவன தரப்பினர்களைப் போலவே, (Accused) குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பட்டியலில், கேப்டன் கூல் மஹேந்திர சிங் தோனியையும் சேர்க்க வேண்டும் என ரூபேஷ் குமார் தன் முதல் தகவல் அறிக்கையில் கேட்டு இருக்கிறார். அம்ரபாலி நிறுவனம், தோனியைப் பயன்படுத்தி தான் பணத்தை பறித்துவிட்டார்கள், ஆக தோனியும் இந்த குற்றத்துக்கு உடந்தை எனக் கொந்தளித்து இருக்கிறார்கள் வீட்டுக்கு பணக் கொடுத்தவர்கள்.

யார் பக்கம்

யார் பக்கம்

எல்லா பிரபலங்களைப் போல, விளம்பர தூதராக வந்து, நின்றது ஒரு தவறா.. என தோனியின் தரப்பில் இருந்து பார்ப்பதா..? அல்லது அன்றாடம் உழைத்து எப்படியாவது சொந்த வீட்டில் குடியேறி விட மாட்டோமா… என கனவோடு தங்கள் வாழ்கையை பணையம் வைத்து அம்ரபாலியில் வீடு வாங்க பணம் கொடுத்த நடுத்தர சம்பள ஏழைகளைப் பார்ப்பதா..? நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns