பி.எஸ்.என்.எல்.,லிலிருந்து 78,000 பேர் ஓய்வு

பி.எஸ்.என்.எல்.,லிலிருந்து 78,000 பேர் ஓய்வு

சென்னை:பி.எஸ்.என்.எல்., ஊழி­யர்­கள் விருப்ப ஓய்வு திட்­டத்­தில் செல்ல, நாடு முழு­வ­தும் 78 ஆயி­ரத்து, 569 பேர் விருப்­பம் தெரி­வித்­துள்­ள­னர்.

பொது துறை நிறு­வ­ன­மான பி.எஸ்.என்.எல்., தனி­யார் நிறு­வ­னங்­க­ளுக்கு இணை­யாக, தொலைத் தொடர்பு சேவை வழங்கி வரு­கிறது. தற்போது, நிதி நெருக்­க­டி­யில் சிக்கி தவிக்­கும் பி.எஸ்.என்.எல்.,லில் விருப்ப ஓய்வு திட்­டம், நவ., 4ம் தேதி துவங்­கப்­பட்­டது. இந்த திட்­டம், நேற்றுடன் நிறை­வ­டைந்­தது.

இதில், நாடு முழு­வ­தும், 78 ஆயி­ரத்து, 569 பேர் விருப்ப ஓய்­வில் செல்ல, விருப்­பம் தெரி­வித்­துள்­ள­னர். 5,237 பேர், தங்­களின் விருப்ப ஓய்வு விண்ண­பத்தை திரும்ப பெற்­றுள்­ள­னர். 626 பேர், பின்­னர் முடிவு செய்­வ­தாக தெரி­வித்­துள்­ள­னர்.

இது­கு­றித்து, பி.எஸ்.என்.எல்., அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது:நாடு முழு­வ­தும் 78 ஆயி­ரத்து, 569 பேர், விருப்ப ஓய்­வில் செல்ல முடிவு செய்­துள்­ள­னர். தமி­ழ­கத்­தில், சென்னை மற்­றும்
தமிழ்­நாடு வட்­டம் இரண்­டும் சேர்த்து, 8,000த்திற்­கும்அதி­மா­னோர், விருப்ப ஓய்­வில் செல்ல விண்­ணப்­பித்­துள்­ள­னர்.இவ்­வாறு, அவர்­கள் கூறி­னர்.

Source: dinamalar

Author Image
Agamagizhan R