Press "Enter" to skip to content

இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி அரசுடன், டி.வி.எஸ்., கைகோர்ப்பு

சென்னை:தமி­ழ­கத்­தில், இளை­ஞர்­க­ளின் திறன் அள­வு­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக, தமிழ்­நாடு திறன் மேம்­பாட்டு நிறு­வ­னத்­துடன், ‘டி.வி.எஸ்., விநியோகம் செயின் சொலு­ஷன்ஸ்’
நிறு­வ­னம் கைகோர்த்­து உள்ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள செய்­திக் குறிப்­பில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:
தமி­ழ­கத்­தில், இளை­ஞர்­க­ளின் திறன் அள­வு­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக, தமிழ்­நாடு திறன் மேம்­பாட்டு நிறு­வ­னம் மற்­றும் லாஜிஸ்­டிக்ஸ் துறை திறன் கவுன்­சி­லு­டன், டி.வி.எஸ்., விநியோகம் செயின் சொலு­ஷன்ஸ் இணைந்­துள்­ளது.

இதில், இளை­ஞர்­கள் உட­ன­டி­யாக வேலைக்கு செல்­லும் வகை­யில், அவர்­க­ளின் திறன்
அள­வு­களை உயர்த்­து­வ­தற்­கான பணியை, டி.வி.எஸ்., மேற்­கொள்­கிறது.லாஜிஸ்­டிக்ஸ் துறை திறன் கவுன்­சி­லு­டன் இணைந்து, 1,600க்கும் மேற்­பட்­டோ­ருக்கு பயிற்சி வழங்­கப்­பட்­டுள்­ளது. அடுத்த ஆண்­டுக்­குள், 10 ஆயி­ரம் பேருக்கு, திறன் அளவை மேம்­படுத்த திட்ட­மிட்­டுள்­ளது.
தமி­ழ­கத்­தில், 6,500 திறன் பயிற்சி பெற்றோர், டி.வி.எஸ்., விநியோகம் செயின் சொலு­ஷன்ஸ் வாயி­லாக பணி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ள­னர்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Source: dinamalar