Press "Enter" to skip to content

‘சூப்பர் மேன்’ ஆனார் சுந்தர் பிச்சை கூகுளின் தாய் நிறுவனத்துக்கும் தலைமை செயல் அதிகாரியானார்

புது­டில்லி:கூகு­ளின் தாய்நிறு­வ­ன­மான,
‘ஆல்­ப­பெட்’ நிறு­வ­னத்­தின் தலைமை செயல்
அதி­கா­ரி­யாக, சுந்­தர் பிச்சை
நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். இதை­யடுத்து, உல­கின் சக்தி வாய்ந்த
கார்ப்­ப­ரேட் தலை­வர்­களில் ஒரு­வ­ராக உயர்ந்­தி­ருக்­கிறார், சுந்­தர்
பிச்சை.

இனி, ‘கூகுள், ஆல்­ப­பெட்’ ஆகிய இரண்டு நிறு­வ­னங்­க­ளுக்­கும், தலைமை செயல் அதி­கா­ரி­யாக சுந்­தர் பிச்­சையே இருப்­பார்.ஆல்­ப­பெட்­டின்
தலைமை செயல் அதிகாரி மற்­றும் தலை­வர் பொறுப்­பு­களை வகித்து வந்த, அதன்
இணை நிறு­வ­னர்­களான பார வண்டி பேஜ் மற்றும் செர்கே பிரின், தங்­கள் பத­வி­யி­
லிருந்து வில­கு­வ­தாக தெரி­வித்­துள்­ள­னர்.

சிறந்த நபர்

இவர்­கள் இரு­வ­ரும் பத­வி­யி­லி­ருந்து வில­கி­னா­லும், நிறு­வ­னத்­தின் உறுப்­பி­னர்­க­ளாக
தொட­ரு­வர் எனக் கூறப்­பட்­டுள்­ளது.கூகுள் நிறு­வ­னத்தை மறு­சீ­ர­மைக்­கும் முயற்­சி­களில் ஒன்­றாக, 2015ம் ஆண்டு, ஆல்­ப­பெட் துவங்­கப்­பட்­டது.இதை­யடுத்து,
இந்­நிறு­வ­னம் கூகு­ளின் தாய் நிறுவன­மா­னது. ஆல்­ப­ பெட்­டின் தலைமை
செயல் அதி­கா­ரி­யாக பார வண்டி பேஜும்,
தலை­வ­ராக செர்கே பிரி­னும் பொறுப்பு
ஏற்­ற­னர்.

இதன் தொடர்ச்­சி­யாக, கூகு­ளின் தலைமை செயல் அதி­கா­ரி­யாக சுந்­தர் பிச்சை நிய­மிக்­கப்­பட்­டார்.தற்­போது, ஆல்­ப­பெட் பொறுப்­பு­க­ளி­லிருந்து பேஜ் மற்றும் பிரின் விலகி உள்­ள­னர்.
புதிய
முயற்­சி­களை துவங்­கு­வ­தற்­காக, இந்த முடிவை எடுத்­தி­ருப்­ப­தாக
தெரி­வித்­தி­ருக்­கும் இந்த இரு­வ­ரும், நிர்வா­கக் குழு
உறுப்பி­னர்­க­ளா­க­வும், பங்கு­தா­ரர்­களாக­வும், இணை
நிறு­வனர்­க­ளா­க­வும் தொடர்ந்து செயல்­ப­டப் போவ­தா­கத் தெரி­வித்­து
உள்ள­னர்.

புதிய பொறுப்பை ஏற்க இருக்­கும் சுந்­தர் பிச்சை குறித்து, இவர்­கள் இருவரும் குறிப்­பிட்­டு உள்ள­தா­வது:ஆல்­ப­பெட்
நிறு­வ­னத்தை இன்­னும் திறம்­ப­டச் செயல்­பட வைக்க நிறைய
வழி­கள்
இருக்கும்­போது, பொறுப்பு­களை நாங்­களே வைத்­தி­ருக்க எப்­போ­தும்
நினைத்­தது­இல்லை.சுந்­தர் பிச்சை அனைத்து தரப்­பி­ன­ரி­ட­மும், தொழில்
நுட்­பம் தொடர்­பான ஆர்­வத்தை துாண்டும் வகை­யில் செயல்­பட்டு வருகிறார்.

பெருமை மிகுந்த பெற்­றோர் போல அன்­பை­யும், அறி­வு­ரை­யை­யும்
கொடுத்­து­விட்டு,
துாரத்­தி­லி­ருந்து விஷ­யங்­களை கவ­னித்­துக்
கொள்­வோம்.நிறு­வ­னத்தை வழி­ந­டத்தி செல்ல, சுந்­தர் பிச்­சை­யைக் காட்­டி­லும் சிறந்த நபர் வேறு யாரும் இருக்க முடி­யாது.ஆல்­ப­பெட்
மற்­றும் கூகுள் நிறு­வ­னத்­திற்கு இனி இரண்டு நிர்­வாக இயக்­கு­னர்­களும், ஒரு தலை­வ­ரும் தேவை­யில்லை.இவ்­வாறு அவர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

மகிழ்ச்சி

இது குறித்து, சுந்­தர் பிச்சை தெரி­வித்­துள்­ள­தா­வது:நான் தொடர்ந்து கூகுள் மீது அதிக கவ­னம் செலுத்து­வேன். கூகுளை ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் பய­னுள்­ள­தாக்க முயற்­சிப்­போம். மேலும்,
தொழில் நுட்பத்­தின் மூலம் பெரிய சவால்­களை சமா­ளிப்­ப­தில், ஆல்­ப­பெட்
நிறு­வ­னத்­தின் நீண்ட கால கவனம் குறித்­தும் மகிழ்ச்சி அடை­கி­றேன். பேஜ்
மற்றும் பிரின் ஆகிய
இரு­வ­ருக்­கும் நன்றி.இவ்­வாறு சுந்­தர் பிச்சை மின் அஞ்­ச­லில் தெரி­வித்­து உள்­ளார்.

வளர்ச்சியின் வரலாறு

* மது­ரை­யில் பிறந்து, 47வது வய­தில் இந்த உலக உய­ரத்தை தொட்­டுள்­ளார்
* ஐ.ஐ.டி., காரக்­பூர், ஸ்டான்­போர்டு பல்­க­லைக்­க­ழ­கம், வார்ட்­டன் வணிக கல்­லுாரி
ஆகி­ய­வற்றில் படித்­த­வர்

* கூகு­ளில் சேர்­வ­தற்கு முன், ‘மெக்­கின்ஸி’ நிறு­வ­னத்­தில் ஆலோ­ச­கர் பணி

* 2004ல் கூகுள் நிறு­வ­னத்­தில் சேர்ந்­தார்

* 2015ல் கூகு­ளின் தலைமை செயல் அதி­காரி பணி

* ‘கூகுள் குரோம்’ உரு­வாக்­கத்­தில் பெரும்பங்­க­ளிப்பு

* ‘செஸ்’ விளை­யா­டு­வது பிடித்­த­மான ஒன்று

*
ஆல்­ப­பெட் நிறு­வன பங்­கு­கள் விலை அதி­க­ரித்து, சுந்­தர் பிச்­சை­யின்
நிய­ம­னத்­துக்கு, பங்குச் சந்­தை­கள் பச்­சைக் கொடி காட்­டி­யுள்­ளன.

அதிகலாபத்­தில் ‘ஆல்­ப­பெட்’

அண்­மைக்
காலத்­தில் உல­கில் மிகவும் மதிப்பு வாய்ந்த நிறு­வன­மாக, ‘ஆல்ப­பெட்’
உரு­வாகி உள்ளது. 2018ல் இதன் வரு­வாய், 7.92 லட்­சம் கோடி ரூபாய். லாபம்
மட்­டும், 2.16 லட்­சம் கோடி ரூபாய்.

Source: dinamalar

More from வணிகம்More posts in வணிகம் »