கலக்கும் விப்ரோ..! காலாண்டில் 2,460 கோடி லாபம்..!

கலக்கும் விப்ரோ..! காலாண்டில் 2,460 கோடி லாபம்..!

 

 

இந்தியாவின் முன்னணி மென் பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் கடந்த டிசம்பர் 2019 காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கின்றன.

விப்ரோ தனது ஐடி சேவை வியாபாரத்தில், நிலையான நாணய அடிப்படையில் (Constant Currency Basis) 2,094 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டி இருக்கிறதாம்.. இது கடந்த காலண்டை விட 1.8 % கூடுதல் வளர்ச்சியாம். அதே போல கடந்த டிசம்பர் 2018-ஐயும், இந்த டிசம்பர் 2019-ஐயும் ஒப்பிட்டால் அது 3.3 % வருவாய் வளர்ச்சி கண்டு இருக்கிறதாம்.

இந்த டிசம்பர் 2019 காலாண்டில் செயல்பாட்டு வரம்பு 18.4% ஆக மேம்பட்டு இருக்கிறதாம். ஒட்டு மொத்தமாக, விப்ரோ டிசம்பர் 2019-ம் காலாண்டில் 2,460 கோடி ரூபாய் நிகர லாபம் பார்த்து இருக்கிறதாம். நிகர லாபத்தை கடந்த டிசம்பர் 2018 உடன் ஒப்பிட்டால், இந்த டிசம்பர் 2019-ல் ஈட்டிய நிகர லாபம் 2.2 % சரிவாம்.

முதன்மை செயல் அதிகாரி (C E O) மற்றும் நிர்வாக இயக்குநரான (M D) அபிதாலி நீமுச்வாலா கூறுகையில், “அனைத்து வியாபார ரகங்களிலும், புவியியல் ரீதியாகவும் நல்ல வளர்ச்சியுடன் ஒரு நல்ல காலாண்டைக் கொடுத்து இருக்கிறோம். எங்களுக்கு வாடிக்கையாளர்களுடன் இருக்கும் உறவுகளை அதிகப்படுத்துவது, எங்களோடு நட்பாக இருப்பவர்களளை, எங்கள் வாடிக்கையாளர்களாக மாற்றுவது, பெரிய ஒப்பந்தங்களை வெல்வது போன்றவைகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்” எனச் சொல்லி இருக்கிறார்.

விப்ரோ நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி (C F O) ஜதின் தலால் கூறுகையில், “அமெரிக்க டாலருக்கு நிகரான இந்த்ஹிய ரூபய மதிப்பு எங்களுக்கு சாதகமாக இருந்ததால் செயல்பாட்டு வரம்பை 0.3% அதிகப்படுத்தி இருக்கிறோம். அதோடு ஒரு வலுவான் பணப் புழக்கத்தையும் உருவாக்கி இருக்கிறோம்” எனச் சொல்லி இருக்கிறார்.

மார்ச் 31, 2020 உடன் முடிவடைய இருக்கும் காலாண்டில், தகவல் தொழில்நுட்ப சேவையில் இருந்து, வரும் வருவாய் 2,095 மில்லியன் டாலரில் இருந்து 2,137 மில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று விப்ரோ எதிர்பார்க்கிறதாம்.

விப்ரோ பங்குகளின் விலை, இன்று வர்த்தக நேர முடிவில் 0.47 % அதிகரித்து நிறைவடைந்து இருக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

Author Image
murugan