வேலைவாய்ப்பு, கட்டுமானம் துறை முக்கியம்.. கார்ப்பரேட் தலைவர்களின் எதிர்பார்ப்பு..!

வேலைவாய்ப்பு, கட்டுமானம் துறை முக்கியம்.. கார்ப்பரேட் தலைவர்களின் எதிர்பார்ப்பு..!

 

 

ஜனவரி 13ஆம் தேதி நடந்த ‘The Making of HERO’ என்ற புத்தகத்தின் வெளியிட்டு விழாவில் நாட்டின் முக்கிய நிறுவனங்களின் பெரும் தலைகள் கலந்துகொண்டு புத்தகத்தையும் தாண்டி நாட்டின் பொருளாதாரம் மற்றும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளைப் பற்றிய அதிகளவில் பேசினர்.

நாட்டின் இருசக்கர வாகன தயாரிப்பில் மிகமுக்கிய நிறுவனமாகத் திகழும் ஹீரோ எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சனில் காந்த் முஞ்சால் தான் ‘The Making of HERO’ என்ற புத்தகத்தை எழுதினார்.

கலக்கும் விப்ரோ..! காலாண்டில் 2,460 கோடி லாபம்..!

டிவிஎஸ் வேணு ஸ்ரீநிவாசன்

டிவிஎஸ் வேணு ஸ்ரீநிவாசன்

இந்தப் புத்தக வெளியிட்டு விழாவில் கலந்துகொண்ட டிவிஎஸ் குரூப் நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீநிவாசன் அடுத்தச் சில நாட்களில் வெளியாக உள்ள பட்ஜெட் அறிக்கையில் நாட்டில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் வேலைவாய்ப்பு சந்தையை மீட்டெடுக்கும் வகையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அதிகம் கவனம் செலுத்தி அதற்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

DCM Shriram

DCM Shriram

இதேபோல் DCM Shriram நிறுவனத்தின் தலைவர் மற்றும் உயர் நிர்வாகத் தலைவர் அஜய் எஸ் ஸ்ரீராம் கூறுகையில் விவசாயத் துறையின் உற்பத்தி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் முக்கியமான திட்டங்கள் தற்போது மிக முக்கியமான தேவையாக உள்ளது. பட்ஜெட் அறிக்கையில் இத்துறை சார்ந்த திட்டங்கள் பெரிய அளவில் தான் வரவேற்பதாகத் தெரிவித்தார்.

சனில் காந்த் முஞ்சால்

சனில் காந்த் முஞ்சால்

மேலும் ஹீரோ எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சனில் காந்த் முஞ்சால் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் நாட்டின் உள்கட்டுமானம் மேம்படுத்தும் வகையில் பெரிய திட்டங்களைத் தான் எதிர்பார்ப்பதாகவும், இத்துறையில் அதிகளவிலான பணத்தை முதலீடு செய்யும் முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

டிவிஎஸ் குரூப் நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீநிவாசன் நேரடியாக வேலைவாய்ப்பு அதிகப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ள நிலையில்,

DCM Shriram நிறுவனத்தின் தலைவர் மற்றும் உயர் நிர்வாகத் தலைவர் அஜய் எஸ் ஸ்ரீராம், ஹீரோ எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சனில் காந்த் முஞ்சால் ஆகிய இருவரும் வெவ்வேறு துறை சார்ந்த திட்டங்களை எதிர்பார்த்தாலும், அவை அனைத்திற்கும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையைத் தான் விரும்புகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

எஸ்பிஐ வங்கி ஆய்வு

எஸ்பிஐ வங்கி ஆய்வு

இந்தியாவில் பல பிரச்சனைகள் இருந்தாலும் நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்தும் வேலைவாய்ப்பு சந்தை இந்த வருடம் பெரிய அளவிலான பாதிப்பைச் சந்தித்துள்ளதாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஆய்வின் முடிவுகள் கூறுகிறது.

இந்த ஆய்வின் முடிவுகள் மத்திய அரசுக்குப் பெரிய எச்சரிக்கை மணியாகவே உள்ளது.

16 லட்சம் வேலைவாய்ப்புகள்

16 லட்சம் வேலைவாய்ப்புகள்

அரசு மற்றும் குறைவான சம்பளம் அளிக்கப்படும் துறைகளில் வெறும் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்படும் நிலை எற்பட்டு உள்ளது. பொதுவாக இத்துறைகளில் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் ஆனால் இந்த வருடம் உருவாக்கப்பட்டு உள்ள வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு, இதேபோல் அடுத்த வருடமும் நாட்டின் பொருளாதார, வர்த்தக நிலை தொடர்ந்தால் மிகவும் குறைவான அளவான 16 லட்ச வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்க முடியும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

ஏழை மாநிலங்கள்

ஏழை மாநிலங்கள்

இந்தியாவில் வேலைக்காகப் பிற மாநிலங்களுக்குச் சென்று வேலை செய்வோர் தங்கள் வீடுகளுக்கு அனுப்பும் பணத்தின் அளவும் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் நாட்டின் ஏழை மாநிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மோசமாக இருக்கும் மாநிலங்களில் இருந்து தான் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து வேறு மாநிலங்களுக்கு வேலைக்காகச் செல்வார்கள்.

பொருளாதாரப் பாதிப்பு

பொருளாதாரப் பாதிப்பு

அப்படிச் சென்ற மக்கள் தங்கள மாநிலங்களில் இருக்கும் குடும்பங்களுக்குப் பணத்தை அனுப்பவில்லை எனில் தத்தம் மாநிலங்கள் அதிகளவில் பாதிக்கப்படும் இதுதான் தற்போது நிகழ்ந்து வருகிறது. இதற்கான தரவுகளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது என எஸ்பிஐ வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் சௌமியா கண்டி கோஷ் தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் மற்றும் வரி வசூல்

நுகர்வோர் மற்றும் வரி வசூல்

இவ்விரு காரணங்களின் மூலம் நாட்டின் நுகர்வோர் மற்றும் வரி வசூல் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இது நீண்ட காலமாக நிகழும் பிரச்சனை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகளவில் குறைந்துள்ளது எனப் பல முறை பல தரப்புகள் கூறிய நிலையில் மத்திய அரசு தொடர்ந்து மறுத்தும், சமாளித்தும் வந்த நிலையில் தற்போது நாட்டின் மாபெரும் பொதுத்துறை வங்கியே இந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

45 வருட உச்சம்

45 வருட உச்சம்

இந்தியாவில் தற்போது இருக்கும் மந்தமான வேலைவாய்ப்பு சந்தை நிலவரம் 45 வருடக் குறைவான நிலையாகும். இது மோடி அரசுக்குத் தீர்க்க முடியாத மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றால் மிகையில்லை.

மேலும் நாட்டின் பொருளாதாரம் 10 வருட மோசமான நிலையில் உள்ளது, மேலும் இதைப் பாதிக்கும் வகையில் நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம், வர்த்தகர்கள் போராட்டம் என உள்ளது.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

ஆசியாவின் 3வது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் இந்தியா இந்த வருடம் வெறும் 5 சதவீதம் வரையில் மட்டுமே வளர்ச்சி அடையும் என ஆய்வுகள் கூறுகிறது. இது சக வளரும் நாடுகளுக்கும் அதிர்ச்சியான செய்தியாக உள்ளது.

ஆனால் எஸ்பிஐ வங்கியோ இந்தி 2019-20ஆம் நிதியாண்டில் 4.6 சதவீதம் அளவில் தான் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மிகப்பெரிய பொருளாதாரச் சரிவிற்குப் பின் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, மோசமான வர்த்தகம் மற்றும் பொருளாதாரக் கொள்கை ஆகியவையும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

டைம் பாம்

டைம் பாம்

இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் நாட்டின் வேலைவாய்ப்பு சந்தையை அதிவிரைவாக மேம்படுத்தும் அளவிற்கு வர்த்தக மற்றும் பொருளாதாரக் கொள்கையை உருவாக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இல்லையெனில் வேலைவாய்ப்பு சந்தை என்னும் டைம்பாம் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் எனவும் எஸ்பிஐ எச்சரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

Author Image
murugan