இந்தியாவின் சிறு, நடுத்தரத் தொழில்கள் கணினி மயமான மயமாக்க $1 பில்லியன் முதலீடு.. அமேசான் திட்டம்!

இந்தியாவின் சிறு, நடுத்தரத் தொழில்கள் கணினி மயமான மயமாக்க $1 பில்லியன் முதலீடு.. அமேசான் திட்டம்!

 

 

டெல்லி: இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பேசோஸ், இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை டிஜிட்டல் மயமாக்க இங்கு 1 பில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் ஜெஃப் பேசோஸ், டெல்லியில் நடந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமேசான் ஸ்ம்பாவ் நிகழ்வில் கலந்து கொண்டு அங்கு உரையாற்றினார்.

அங்கு 21ம் நூற்றாண்டு இந்திய நூற்றாண்டாகப் போகிறது என்றும் கூறியுள்ளார். மேலும் 2025ம் ஆண்டில் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள மேக் இன் இந்தியா பொருட்களை அமேசான் நிறுவனம் ஏற்றுமதி செய்யும் என்றும் ஜெஃப் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்திய ஜனநாயகத்தை பற்றி பாராட்டி பேசிய பேசோஸ், 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது என்று கூறியுள்ளார். மேலும் உலகின் மிகப்பெரிய பழமையான ஜனநாயக நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் இந்த நூற்றாண்டில் மிக முக்கியமான கூட்டணியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

சுறு சுறுப்பு, ஆற்றல், வளர்ச்சி என்ற சிறப்பு இந்த நாட்டிற்கு உள்ளது. அது ஒரு சிறந்த ஜனநாயகம் என்றும் பேசோஸ் கூறியுள்ளார். மேலும் அமேசான் ஏற்கனவே 1,000 மின்சார வினியோக வாகனங்களை ஆர்டர் செய்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

மூன்று நாள் பயணமாக வந்துள்ள பேசோஸ், பிரதமர் மற்றும் இந்திய சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனர்களை சந்தித்து பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அமேசானுக்கு எதிராக போர்கொடி தூக்கி வரும் இந்திய வர்த்தகர்கள் மத்தியில், இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் ஆழ்ந்த தள்ளுபடிகளை வழங்கி வருவதாக பலத்த எதிர்ப்புகள் நிலவி வருகின்றது. இந்த நிலையில் பிரதமர் மோடியை எதற்காக சந்திக்க உள்ளார், ஆன்லைன் சில்லறை வர்த்தகம் தொடர்பான விதிமுறைகள். பற்றி இந்த சந்திப்பில் பேசப்படுமா? அல்லது இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பா? என இன்னும் இரண்டு நாட்கள் கழித்தே தெரியவரும். ஆக பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்னதான் நடக்கிறது என்று.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

Author Image
murugan