மந்த நிலையிலும் சாதனை படைத்த எல்&டி.. கொண்டாட்டத்தில் நிறுவனம்..!

மந்த நிலையிலும் சாதனை படைத்த எல்&டி.. கொண்டாட்டத்தில் நிறுவனம்..!

 

 

நாட்டில் நிலவி வரும் மந்த நிலையில் பல நிறுவனங்கள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன. சொல்லப்போனால் பல நிறுவனங்கள் மூடப்பட்டு வருகிறது. இதனால் காரணமாக பல நிறுவனங்கள் பணி நீக்கமும் செய்து வருகின்றன. இது ஒரு புறம் எனில், மறுபுறம் மந்த நிலையிலும் பல நிறுவனங்கள் சாதனை படைத்து வருகின்றன.

அதிலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவி வரும் சவாலான நிலையிலும் கூட, லார்சன் அன்ட் டூப்ரோ இன்ஃபோடெக் நிறுவனம் லாபம் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் பெரும் அளவில் ஏற்றம் காண விட்டாலும், கடந்த ஆண்டை காட்டிலும் நிகரலாபம் சற்று அதிகரித்துள்ளது.

நிகரலாபம்

லார்சன் அன்ட் டூப்ரோ இன்ஃபோடெக் நிறுவனம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் 376.7 கோடி ரூபாய் நிகரலாபம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 375.5 கோடி ரூபாய் லாபம் கண்டிருந்ததாக பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

செலவு அதிகரிப்பு

செலவு அதிகரிப்பு

இதே டிசம்பர் காலாண்டில் வருவாய் 2811.1 கோடி ரூபாய் வருவாய் கண்டுள்ளதாகவும், இது முந்தைய நிதியாண்டில் இதே காலாண்டில் 2,472.9 கோடி ரூபாய் வருவாய் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது கிட்டதட்ட 14% அதிகமாகும். இதே ஒருங்கிணைந்த செலவுகள் 2,375.5 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் 2001.5 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

பெரிய திட்டங்கள் உதவின

பெரிய திட்டங்கள் உதவின

நாங்கள் தரமான பரந்த அடிப்படையிலான செயல்திறனில் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் பிரிந்த நிறுவனத்தை இயக்குவதற்கான எங்கள் மூலோபாயம் மற்றும் முதலீடுகள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்றாக ஒத்திசைக்கின்றன. ஆக நாங்கள் தொடர்ந்து பெரிய ஒப்பந்தங்களை வென்று வருகிறோம். கடந்த டிசம்பர் காலாண்டில் இரண்டு பெரிய ஈடுபாடுகளை நாங்கள் வென்றுள்ளோம். இது லாபம் காண எங்களுக்கு வழி வகுத்தது என்றும் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான சஞ்சய் ஜலோனா தெரிவித்துள்ளார்.

பங்கு விலை

பங்கு விலை

இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சாதகமாக வந்துள்ள நிலையில், லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்தின் பங்கு விலையானது பிஎஸ்இ-யில் 2.38% அதிகரித்து (44.70 ரூபாய்) 1922.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே என்எஸ்இ-யில் 2.96% ஏற்றம் கண்டு 1,933.60 ரூபாயாகவும் வர்த்த்தமாகி முடிவடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

Author Image
murugan