‘வரவு செலவுத் திட்டம்’ நாளில் ஊழியர்கள் ஸ்ட்ரைக்.. நாடு முழுவதும் வங்கி சேவை முடக்கம்..!

‘வரவு செலவுத் திட்டம்’ நாளில் ஊழியர்கள் ஸ்ட்ரைக்.. நாடு முழுவதும் வங்கி சேவை முடக்கம்..!

 

 

இந்தியா பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் வங்கி துறையில் வராக் கடன், நிர்வாகப் பிரச்சனை, மந்தமான வர்த்தகம் எனப் பல பிரச்சனைகள் இருக்கும் நிலையில் ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனை அதிகளவில் இருப்பதாகத் தெரிகிறது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் 2020-21ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கும் நிலையில் அதேநாளில் மத்திய அரசை நேரடியாக எதிர்க்கும் தொனியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

சம்பளம் பிரச்சனை

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான அமைப்பு இந்திய வங்கிகள் அமைப்புடன் சம்பள உயர்வு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது வங்கி ஊழியர்கள் சங்கங்கள் நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.

ஓரே மாதத்தில் 2வது போராட்டம்..

ஓரே மாதத்தில் 2வது போராட்டம்..

ஜனவரி 8ஆம் தேதி வங்கி ஊழியர்கள் சங்கம் பார்த் பந்த் உடன் இணைந்து நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது அடுத்தப் போராட்டத்தை வருகிற ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் போராட்டத்தை நடத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் அடுத்த 15 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தால் போராட்டத்தைக் கைவிட வாய்ப்புகள் உள்ளது.

பட்ஜெட் 2020-19

பட்ஜெட் 2020-19

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள ஜனவரி 31ஆம் தேதியன்று பொருளாதார ஆய்வு அறிக்கையும், பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2வது முறையாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார். பிப்ரவரி 1ஆம் தேதி மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் வங்கி காட்டாயம் இயங்கி வேண்டிய நாள், ஆனாலும் வங்கி ஊழியர்கள் பட்ஜெட் நாளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

கோரிக்கை

கோரிக்கை

தற்போது நடைப்பெற்ற பேச்சுவார்த்தை வங்கி ஊழியர்கள் அமைப்பு, 12.25 சதவீத சம்பள உயர்வு, வங்கி இணைக்கப்படும் போது அளிக்கப்படும் சிறப்புக் கொடுப்பனவு தொகையை அடிப்படை சம்பளத்தில் இணைப்பு மற்றும் அனைத்துப் பொதுத்துறை வங்கிகளுக்கும் கட்டாயம் 5 நாள் வேலைநாள் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இதை ஏற்க மறுத்துள்ளது IBA என்னும் இந்திய வங்கிகள் அமைப்பு.

இவர்கள் கேட்கும் கோரிக்கை சரியானதா..? பதிலை கமெண்ட் பகுதியில் பதிவிடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

Author Image
murugan