ரூ. 2, 400 கோடி வசூல்.. பிஜேபி தான் டாப்பு..!

ரூ. 2, 400 கோடி வசூல்.. பிஜேபி தான் டாப்பு..!

 

 

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டு எந்தெந்த அரசியல் கட்சிகள் எவ்வளவு தொகை வருமான பெறுகிறது, அதில் எவ்வளவு பணத்தைச் செலவு செய்கிறது என்பதை ஏடிஆர் என்கிற Association for Democratic Reforms அமைப்பு ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. இதேபோல் இந்த வருடமும் ஏடிஆர் அமைப்பு 2018-19ஆம் நிதியாண்டுக்கான கணக்கு விபரத்தை வெளியிட்டுள்ளது.

2017-18ஆம் ஆண்டை போலவே 2018-19ஆம் நிதியாண்டிலும் மோடி – அமித் ஷா தலைமையிலான அரசு பிஜேபி கட்சி தான் அதிகளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. சொன்ன நம்பமாட்டிங்க, நாட்டின் 6 பெரும் கட்சிகள் பெற்ற மொத்த வருமானத்தில் பிஜேபி மட்டும் சுமாப் 65.16 சதவீத தொகையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்குப் பம்பர் ஆஃபர்.. பட்ஜெட்-இல் மாபெரும் அறிவிப்பு..!

மொத்த வருமானம்

மொத்த வருமானம்

2018-19ஆம் நிதியாண்டில் நாட்டின் 6 முக்கிய அரசியல் கட்சிகளான பிஜேபி, காங்கிரஸ், சிபிஎம், பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், சிபிஐ ஆகிய கட்சிகள் நன்கொடை மற்றும் இதர வழிகளின் மூலம் சுமார் 3, 698.66 கோடி ரூபாய் அளவிலான தொகையை வருமானமாகப் பெற்றுள்ளதாக Association for Democratic Reforms அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

பிஜேபி

பிஜேபி

தற்போது ஆட்சியில் இருக்கும் பிஜேபி கட்சி மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்று 2வது முறையாக ஆட்சி அமைத்துச் சாதனை படைத்துள்ளது. ஆனால் அடுத்தடுத்து நடைபெற்ற மாநில தேர்தல்களில் பெரிய அளவிலான தோல்வியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2018-19ஆம் நிதியாண்டில் பிஜேபி இந்தியா முழுவதிலும் இருந்து தனது கட்சிக்கு 2, 410.08 கோடி ரூபாய் அளவிலான நிதியை பெற்றுள்ளது. இதில் 41.71 சதவீத தொகையை அதே நிதியாண்டில் தேர்தல் விளம்பரம், நிர்வாகச் செலவு எனப் பல்வேறு விஷயங்களுக்காகச் செலவு செய்துள்ளது. 2017-18ல் பிஜேபி வெறும் 1027.34 கோடி ரூபாய் மட்டுமே வருமானமாகப் பெற்ற நிலையில் 2018-19நிதியாண்டு வருமானத்தில் 139.59 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

2018-19ஆம் நிதியாண்டில் காங்கிரஸ் 918.03 கோடி ரூபாய் அளவிலான நிதியை வருமானத்தைப் பெற்றுள்ளது. இதில் 51.19 சதவீத அளவிலான தொகையை அதாவது 469.92 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் செலவு செய்துள்ளது. காங்கிரஸ் 2017-18ஆம் நிதியாண்டில் வெறும் 199.15 கோடி ரூபாய் அளவிலான நிதியை மட்டுமே நன்கொடையாகப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற கட்சிகள்

மற்ற கட்சிகள்

முதல் 2 இடத்தைப் பிஜேபி, காங்கிரஸ் பெற்ற நிலையில் 3வது இடத்தைத் திரிணாமுல் காங்கிரஸ் 192.65 கோடி ரூபாய் வருமானத்துடன் பிடித்துள்ளது. இதில் 11.50 கோடி ரூபாய் அளவிலான நிதியைச் செலவு செய்துள்ளது.

மார்க்ஸிஸ்ட் கட்சி 100.96 கோடி ரூபாயுடன் 4வது இடத்தையும், பகுஜன் சமாஜ் 69.79 கோடி ரூபாய் உடன் 5வது இடத்தையும், கம்யூனிஸ்ட் கட்சி 7.15 கோடி ரூபாயுடன் 6வது இடத்தையும் பிடித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

Author Image
murugan