ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்குப் பம்பர் ஆஃபர்.. வரவு செலவுத் திட்டம்-இல் மாபெரும் அறிவிப்பு..!

ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்குப் பம்பர் ஆஃபர்.. வரவு செலவுத் திட்டம்-இல் மாபெரும் அறிவிப்பு..!

 

 

பிப்ரவரி 1ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள பட்ஜெட் அறிக்கையை எதிர்நோக்கி சமானிய மக்கள் மட்டும் அல்லாமல் தொழிற்துறை நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய அளவில் எதிர்நோக்கிக் காத்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் நாட்டின் பொருளாதார 10 வருட மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில் இதை மேம்படுத்த மத்திய அரசு தொழிற்துறைக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் என்பதால் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

எதிர்பார்ப்புக்கு ஏற்றப்படி தற்போது முக்கியமான ஒகு தகவல் கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பால் ஆப்பிள், சாம்சங், சியோமி போன் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் உள்ளது.

அப்படி என்ன அறிவிப்புன்னு தானே கேட்குறீங்க..? வாங்கப் பார்க்கலாம்.

ஜியோவுக்கு முன், ஜியோவுக்குப் பின்: இந்திய டெலிகாம்

ஆப்பிள், சாம்சங்

ஆப்பிள், சாம்சங்

இந்தியாவில் வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்க வெளிநாட்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களை ஈர்க்கும் திட்டத்துடன் உலகின் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களை இந்தியாவில் ஸ்மார்ட்போன் தொழிற்சாலை துவங்க அழைப்பு விடுத்தும் அவர்களுக்கு ஏதுவான தளத்தை அமைத்துத் தர முடிவு செய்துள்ளது மத்திய அரசு.

கடன் உதவி

கடன் உதவி

இந்தியாவில் ஸ்மார்ட்போன் தொழிற்சாலை அமைக்க வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2வது பட்ஜெட் அறிக்கையில் சேர்க்க உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இது வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

வட்டியில் மானியம்

வட்டியில் மானியம்

இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் நிறுவனங்களுக்கு உள்நாட்டு வங்கிகளின் வாயிலாகக் கடன் கொடுக்கவும், அதோடு கடனுக்கான வட்டியில் மானியம் கொடுக்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது. இதுமட்டும் அல்லாமல் வரி, சுங்க வரி, சாலை, மின்சாரம், தண்ணீர் விநியோகம் ஆகியவற்றிலும் மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து உதவி செய்ய உள்ளதாகவும் தெரிகிறது.

190 பில்லியன் டாலர் சந்தை

190 பில்லியன் டாலர் சந்தை

தற்போது நாட்டின் 24 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட்போன் சந்தை 2025ஆம் ஆண்டுக்குள் 190 பில்லியன் டாலர் சந்தையாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளது மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகவே இத்திட்டத்தை வடிவமைத்துள்ளது.

சீனா

சீனா

சீனாவில் இருந்து தற்போது பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன் தயாரிப்புத் தளத்தை வேறு நாட்டுக்கு மாற்றி வரும் நிலையில் இந்தியா இந்த வாய்ப்பை அடைந்து தீர வேண்டும் என்ற நோக்கத்தில் இயங்கி வருகிறது.

இதன் மூலம் நாட்டில் இருக்கும் வேலைவாய்ப்புப் பிரச்சனை தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் திடீர் முடிவால் மயானம் ஆன சீன நகரம்.. ஆட்டம் துவங்கியது..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

Author Image
murugan