42,000 தொட்ட சென்செக்ஸ்..!

42,000 தொட்ட சென்செக்ஸ்..!

 

 

இன்று காலை சென்செக்ஸ் வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தன் வாழ் நாள் உச்சமான 42,000 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகத் தொடங்கியது.

தென் இந்தியாவில் தான் பொங்கல், மகர சங்கராந்தி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு விடுமுறை. ஆனால் வட இந்தியாவில் எல்லா சராசரி வேலை நாளை போல செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. எனவே இந்திய பங்குச் சந்தைகளும் நேற்று செயல்பட்டது.

நேற்று மாலை சென்செக்ஸ் 41,872 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,924 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் அதிகபட்சமாக 42,059 புள்ளிகளைத் தொட்டது. ஆனால் அடுத்த அரை மணி நேரத்துக்குள், சென்செக்ஸ் இறக்கம் காணத் தொங்கிவிட்டது. தற்போது சுமாராக 41,865 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

இன்று காலை நிஃப்டி 12,347 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 12,340 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 10 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 20 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,437 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,334 ஏற்றத்திலும், 942 பங்குகள் இறக்கத்திலும், 161 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. 2,437 பங்குகளில் 92 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 53 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

ஈஷர் மோட்டார்ஸ், நெட்லே, பவர் கிரிட் கார்பப்ரேஷன், பார்தி ஏர்டெல், ஜி எண்டர்டெயின்மெண்ட் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. என் டி பி சி, வேதாந்தா, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், கோல் இந்தியா, ஹீரோ மோட்டோ கார்ப் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 64.37 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. அதோடு அமெரிக்க டாலருகு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.96 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

Author Image
murugan