மிகவும் பாதுகாப்பான தேர் புதிய டாடா அல்ட்ராஸ்

மிகவும் பாதுகாப்பான தேர் புதிய டாடா அல்ட்ராஸ்

புதுடில்லி : சந்தையில், தற்போது மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் வாகனமாக, டாடா மோட்டார்ஸின் புதிய அறிமுகமான, டாடா அல்ட்ராஸ் உள்ளது.

இந்தியாவின், பிரிமீயம் ஹேட்ச்பேக் பிரிவில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதல் முறையாக, அல்ட்ராஸ் மூலம் நுழைந்துள்ளது.இந்த காரில் மிகவும் குறிப்பிடத்தகுந்த விஷயம், அதன் பாதுகாப்பு அம்சங்கள் தான். உலக அளவிலான, என்.சி.ஏ.பி., தர மதிப்பீட்டில், 5 நட்சத்திர தர குறியீட்டை பெற்றிருக்கிறது, அல்ட்ராஸ். மொத்தம், 5 அட்டகாசமான கலர்களில் கிடைக்கிறது. இந்த காரின் இன்ஜின், பிஎஸ்-_6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணக்கமானது.

டாடா மோட்டார்ஸ் பயணியர் வாகன பிரிவின் தலைவர் மயங்க் பரீக் கூறியதாவது:பாதுகாப்பு வடிவமைப்பு, இயக்கவியல் அம்சங்கள், தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர்களின் பெருமகிழ்ச்சி ஆகியற்றில் தங்க தர நிலைகளை அல்ட்ராஸ் நிறுவியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த பயண அனுபவத்தை, டாடா அல்ட்ராஸ் உறுதியாக வழங்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

பெட்ரோல் வேரியன்ட், 5.29 ரூபாய் மற்றும், டீசல் வேரியன்ட், 6.99 லட்சம் ரூபாய் என, அல்ட்ராஸ் காரின் விலை துவங்குகிறது.

Source: dinamalar

Author Image
Agamagizhan R