செபி தலைவர் தியாகிக்கு பதவி நீட்டிப்பு இல்லை

செபி தலைவர் தியாகிக்கு பதவி நீட்டிப்பு இல்லை

புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான முயற்சியில், மத்திய நிதியமைச்சகம் இறங்கி உள்ளது.

தற்போது செபியின் தலைவராக இருக்கும் அஜய் தியாகியின் பதவிக் காலம், அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. கடந்த, 2017ம் ஆண்டு, மார்ச் 1ல் இவர் செபியின் தலைவராக பொறுப்பேற்றார். பதவிக் காலம், 3 ஆண்டுகள்.

அஜய் தியாகிக்கு, குறைந்தபட்சம் மேலும் இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு கிடைக்கும் என, பல தரப்பிலும் எதிர்பார்த்து இருந்த நிலையில், தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, அஜய் தியாகிக்கு பதவி நீட்டிப்பு இருக்காது என்கிறார்கள்.

இதற்கு முன் செபி தலைவராக பணியாற்றிய, யு.கே.சின்ஹாவுக்கு மூன்று ஆண்டுகள் பதவிக் காலத்தை நீட்டித்து அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Source: dinamalar

Author Image
Agamagizhan R