நஷ்டத்திலிருந்து லாபத்திற்கு திரும்பிய சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.. எப்படி..!

நஷ்டத்திலிருந்து லாபத்திற்கு திரும்பிய சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.. எப்படி..!

 

 

நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் வங்கித்துறை பெருத்த அடி வாங்கியுள்ளது என்றே கூறலாம். ஆனால் இப்படியொரு மந்த நிலைக்கு மத்தியிலும் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா இந்தியா 155 கோடி ரூபாய் நிகரலாபம் கண்டுள்ளாதாக அறிவித்துள்ளது.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இது முந்தைய ஆண்டில் 718 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் காலாண்டில் மொத்த வருமானம் 15% அதிகரித்து 7,278 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 6,329 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

image8 நிறுவனம் இணைந்து உருவாக்கிய எலக்ட்ரிக் வாகன தளம்.. டாடா அதிரடி..!

இதே நிகரவட்டி வருவாய் 11.34% அதிகரித்து 2,022 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 1,816 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதே போல் இந்த நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் இயக்க லாபம் 1,696 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 137.20% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டில் 715 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே மூன்றாம் காலாண்டில் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு அளவு 13,568.05 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 15,605.07 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது கிட்டதட்ட 13% குறைந்துள்ளது.

மேலும் கடந்த 2018 – 19ம் ஆண்டில் மொத்த வாராக்கடன் அளவு 32,356.04 கோடி ரூபாய் மொத்த வாராக்கடன் அளவு அறிவித்திருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கி இதை 34,921.04 கோடி ரூபாயாக மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே நிகர வாராக்கடன் அளவு 11,333.24 கோடி ரூபாயாக மதிப்பிட்டுள்ளது இவ்வங்கி. ஆனால் ரிசர்வ் வங்கி இதை 13,898.24 கோடி ரூபாயாக மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக இது 2,565 கோடி ரூபாய் விலகலுக்கு வழி வகுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா பங்கின் விலை 1.29% வீழ்ச்சி கண்டு 19.10 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

Author Image
murugan