அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6- 6.5% ஆக இருக்கலாம்.. மீண்டும் வீழ்ச்சிதானா?

அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6- 6.5% ஆக இருக்கலாம்.. மீண்டும் வீழ்ச்சிதானா?

 

 

டெல்லி: நாட்டில் பட்ஜெட் நாளை மக்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நாளில், இந்தியாவில் முதன்மை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தனது இரண்டாவது பொருளாதார சர்வேயை இன்று தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த நிலையில் அந்த பொருளாதார சர்வேயில் அடுத்த ஏப்ரல் 1 அன்று ஆரம்பமாக இருக்கும் நிதியாண்டில் வளர்ச்சி 6 – 6.5% ஆக மதிப்பிடலாம் என்றும், இதை அறிந்த செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் இந்தியா ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வளர்ச்சியை எதிர்கொண்டுள்ள நேரத்தில், அதுவும் ஜிடிபி விகிதம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5% ஆக செப்டம்பர் காலாண்டில் வெளியானது. இது ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான இளைஞர்கள் தொழிலாளர் தொகுப்பில் நுழைவதை இது பாதிக்கிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 31வுடன் முடியவிருக்கும் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விரிவாக்கமானது 5% ஆக இருக்கும் என்றும் அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. இது கடந்த 2008/09க்கு பிறகு மிக மோசமான மெதுவான வளர்ச்சியாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் அவர்களின் பொருளாதார கணக்கெடுப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும், மத்திய அரசாங்கம் அதன் பட்ஜெட்டை சனிக்கிழமையன்று தாக்கல் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தனது இரண்டாவது பொருளாதார சர்வேயை தாக்கல் செய்யவிருக்கும் கிருஷ்ண மூர்த்தி சுப்பிரமணியன் பொருளாதார சர்வேயில் என்னென்ன அம்சங்கள் இருக்கலாம் என சில நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அதன் படி நாட்டில் ஜிடிபி விகிதம் கடந்த செப்டம்பர் காலாண்டிலேயே படுவீழ்ச்சி கண்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் பொருளாதார இலக்கான 5 டிரில்லியன் டாலர் இலக்கினை அடைய என்னென்ன செய்யலாம். எந்த மாதிரியான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் எடுக்கலாம். பாதாளத்தில் உள்ள ஜிடிபி விகிதத்தினை மீட்டெடுக்க என்னென்ன செய்யலாம் உள்ளிட்டவற்றை பற்றி கூறலாம் என்றும் கருதப்படுகிறது.

வாருங்கள் என்ன தான் பொருளாதார சர்வேயில் சொல்கிறார் என்றும் பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

Author Image
murugan