வரவு செலவுத் திட்டம்-க்கு முன்னாடியே இப்படியா..? வரவு செலவுத் திட்டம்-க்குப் பின் என்ன ஆகுமோ..?

வரவு செலவுத் திட்டம்-க்கு முன்னாடியே இப்படியா..? வரவு செலவுத் திட்டம்-க்குப் பின் என்ன ஆகுமோ..?

 

 

இந்தியாவின் பட்ஜெட் திருவிழா, உச்ச கட்டத்தில் இருக்கிறது. எப்போதும் சனிக்கிழமைகளில் விடுமுறையாக இருக்கும் பங்குச் சந்தை இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், பங்குச் சந்தைகளும் திறந்து இருக்கின்றன.

கடந்த பிப்ரவரி 28, 2015, சனிக்கிழமை அன்று, முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த போது கூட மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை திறந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, இன்று காலை சென்செக்ஸ் சுமாராக 275 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது.

சென்செக்ஸ்

நேற்று மாலை சென்செக்ஸ் 40,723 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,753 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. 30 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கினாலும், அடுத்த சில நிமிடங்களில், சென்செக்ஸ் தன் இன்றைய குறைந்தபட்ச புள்ளியான 40,444 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது.

ஏற்றம்

ஏற்றம்

தற்போது சுமாராக 40,600 புள்ளிகளைத் தொட்டு ஏற்றம் காண முயற்சித்துக் கொண்டு இருக்கிறது சென்செக்ஸ். இன்று காலை நிஃப்டி 12,100 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 11,947 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக நிஃப்டி சுமாராக 85 புள்ளிகள் சரிவில் இருக்கிறது.

சென்செக்ஸ் 30 நிலவரம்

சென்செக்ஸ் 30 நிலவரம்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,090 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 580 ஏற்றத்திலும், 477 பங்குகள் இறக்கத்திலும், 33 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

52 வார விலை போக்கு

52 வார விலை போக்கு

மும்பை பங்குச் சந்தையான பி எஸ் இ-யில், வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் 1,090 பங்குகளில், இந்த காலை நேரத்திலேயே 23 பங்குகளின் விலை 52 வார அதிக விலையிலும், 21 பங்குகளின் விலை 52 வார இறக்க விலையிலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பட்ஜெட் முடியும் போது என்ன நிலவரம் என்று பார்ப்போம்.

ஏற்ற இறக்கம்

ஏற்ற இறக்கம்

ஹெச் யூ எல், கெயில், பஜாஜ் ஃபின்சர்வ், பி பி சி எல், அல்ட்ரா டெக் சிமெண்ட் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பவர் கிரிட் கார்ப், டெக் மஹிந்திரா, என் டி பி சி, டாடா ஸ்டீல், கோல் இந்தியா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

சர்வதேச நிலவரம்

சர்வதேச நிலவரம்

உள் நாட்டு நிலவரங்கள் எல்லாமே ஓகேவாகத் தோன்றினாலும், சர்வதேச பங்குச் சந்தை காரணிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியுமா என்ன..? ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 56.62 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. இது நல்ல விஷயம் என்றாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.35 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருவது கொஞ்சம் நெகட்டிவ்வாகத் தான் பார்க்க வேண்டி இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

Author Image
murugan