அன்னிய செலவாணி கையிருப்பு புதிய உச்சம்.. வரவு செலவுத் திட்டம் சமயத்தில் பரப்பரப்பு..!

அன்னிய செலவாணி கையிருப்பு புதிய உச்சம்.. வரவு செலவுத் திட்டம் சமயத்தில் பரப்பரப்பு..!

 

 

நாட்டில் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், தற்போது தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்து கொண்டிருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்த சமயத்தில் ஒரு நல்ல செய்தி வெளியாகி இருக்கிறது. அது அன்னிய செலவாணி கையிருப்பு உயர்வு தான்.

அன்னிய செலவாணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவு $466.693 பில்லியனை எட்டியுள்ளது.

அன்னிய செலவாணி உயர்வு

நாட்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை இலக்கை தாண்டி செல்லும் நிலையில், அன்னிய செலவாணி கையிருப்பு 466.693 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.. இது ஜனவரி 24 அன்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்ட அறிக்கையின் படி, இந்த கையிருப்பானது இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. இந்த அன்னிய செலவாணி கையிருப்பு கடந்த வாரத்தில் 462.16 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம் இருப்பு

தங்கம் இருப்பு

வெளிநாட்டு நாணய சொத்துகளின் உயர்வின் காரணமாக இந்த இருப்பு உயர்ந்தூள்ளதாக கூறப்படுகிறது. இது ஒட்டுமொத்த இருப்புகளின் முக்கிய அங்கமாகும். அறிக்கை வாரத்தில் தங்க இருப்பு 153 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து, 28,715 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

அன்னிய இருப்பு

அன்னிய இருப்பு

இதே சிறப்பு வரைதல் உரிமைகள் (SDRs) உடன் 3 மில்லியன் அமெரிக்கா டாலர் குறைந்து 1.45 பில்லியன் டாலர்களாக உள்ளது. இதே சர்வதேச நாணய நிதியத்துடனான நாட்டின் இருப்பு நிலை 85 மில்லியன் டாலர் வரை அதிகரித்து, 3,615 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளதாக ஆர்பிஐ அறிக்கை தெரிவித்துள்ளது.

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பது, பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, பணத் தட்டுப்பாடு ஏற்படும் போது பணத்தினை அச்சிட்டு வங்கிகளுக்கு அளிப்பது போன்ற செயல்பாடுகளுக்கென இந்த கையிருப்புகள் மிக அவசியமாகின்றன. இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்த கையிருப்புகளே மிக முக்கியக் காரணமாகும்.

அன்னிய கையிருப்பு அவசியம்

அன்னிய கையிருப்பு அவசியம்

ரிசர்வ் வங்கியிலிருக்கும் அனைத்து சொத்துக்களுமே பங்குச் சந்தையைப் பொறுத்தே ஏற்ற இறக்கத்தைச் சந்திக்கின்றன. இந்த நிலையில் சந்தை பற்றிய அபாயம் மிகுந்தவை என்பதால் கையிருப்புகளை செலவிட முடியாது என்றும், இது மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்றும் ரிசர்வ் வங்கி நினைக்கிறது. உதாரணமாக மோசமான நெருக்கடி நிலைமைகளில் எல்லா சொத்துகளின் மதிப்பும் வீழ்ச்சியை சந்திக்கும். அப்போது அதனைச் சரி செய்ய இந்த கையிருப்புகள் மிக அவசியமாகும். இதற்கிடையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தற்போது தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

Author Image
murugan