டெல்லி: நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் அறிக்கையில் கம்பீரமாக அடுத்து வரும் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும் என்றும், இது விவசாயத் துறையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு அப்பாலும், வேளாண் துறை நெருக்கடியினை சரிசெய்யவும், நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயத்துறையை மேம்படுத்தவும் 16 அம்ச திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
சரி அதென்னன்ன 16 அம்ச திட்டங்கள், இது விவசயிகளுக்கு கைகொடுக்குமா? வாருங்கள் பார்க்கலாம்.
வருமானம் இரட்டிப்பு
பிரதமர் மோடியின் கனவை நனவாக்கும் விதமாக 2020க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது பிரதமர் மோடியின் இலக்காகும். இதனை புதுபிக்கும் விதமாக புதிய 16 அம்ச திட்டங்களை தனது பட்ஜெட் உரையில் தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இது விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்தும் விதமாக அமையும் என்றும் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.

சிறப்பம்சம் கொண்ட பட்ஜெட்
இது தவிர Aspirational India, அனைவருக்கும் பொருளாதார வளர்ச்சி (Economic development for all), நலவாழ்வு சமுதாயத்தை உருவாக்குவது (caring society) உள்ளிட்ட மூன்று அம்சங்களை கொண்டது இந்த பட்ஜெட் என்று நிதியமைச்சர் தனது உரையின் போது கூறியிருந்தார்.

கிருஷி உடான்
விவசாய விளைச்சலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கிருஷி உடான் திட்டம் (Krishi Udan scheme) விமான போக்குவரத்து அமைச்சகத்தால் தொடங்கப்படும். இது விவசாய பொருட்களை வெளி நாடுகளுக்கு எடுத்து சென்று அதை விற்பனை செய்ய பெரிதும் உதவும். இதே போல 2021-ம் ஆண்டுக்கான விவசாயக் கடன் தொகை 15 லட்சம் கோடி ரூபாயாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது முன்னர் 12 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பால் உற்பத்தி அதிகரிக்கப்படும்
வேளாண்மை மற்றும் நீர்ப் பாசனத்திற்கு 2021ம் நிதியாண்டில் 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு 1.23 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இதோடு தற்போதுள்ள பால் உற்பத்தி 2025-ம் ஆண்டுக்குள் 108 மெட்ரிக் மில்லியன் டன்னாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

நீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை
இந்தியா முழுவதிலும் நீர்ப் பற்றாக்குறை உள்ள சுமார் 100 மாவட்டங்களை மேம்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் விவசாயக் கிடங்குகள், குளிர் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் பிற சரக்குக் களஞ்சியங்களை மேப்பிங் மற்றும் ஜியோ டேக்கிங் செய்வதற்கான முயற்சியை நபார்டு மேற்கொள்ளும்.

கிசான் ரயில்
மேலும் கிராமம்தோறும் சேமிப்புக் கிடங்குகளை நிறுவி, விவசாயிகளின் உற்பத்தியை சேகரிக்க வழிவகை செய்யப்படும். மேலும் இந்தக் கிடங்குகள் பெண்கள் மூலம் பராமரிக்கப்படும். மேலும் இந்த விவசாய பொருட்கள் ஓரிடத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு, மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லவும், பொருள்கள், சந்தைகளை சென்றடையவும் கிசான் ரயில் திட்டம் தொடங்கப்படும்.

சூரிய சக்தியை பயன்படுத்த ஊக்குவிப்பு
மத்திய அரசு வகுக்கும் மாதிரி விவசாயச் சட்டங்களை அமல்படுத்த மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும். இதெல்லாவற்றையும் விட Pradhan Mantri Kisan Urja Suraksha evem Utthan Mahabhiyan திட்டத்தின் மூலம் மண்ணெண்ணெய் பயன்பாட்டினை நீக்கி சூரிய சக்தியைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படும். இதற்காக 20 லட்சம் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கபப்டும். இதோடு பண்னை சந்தைகள் தாரளமயமாக்கபடும். பண்ணை நிலங்களில் உரங்களின் சம நிலையான பயன்பாடு என பல கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்காக தான்யலட்சுமி
தோட்டப்பயிர்களின் விளைச்சல், தானிய விளைச்சலைவிடப் பன்மடங்கு அதிகமாக உள்ளது. இந்நிலையைச் சமன்படுத்த ஒரு மாவட்டம், ஒரு பயிர் என்ற திட்டம் நிறுவப்படும். சேமிப்புக் கிடங்குகளில் வழங்கப்படும் பொருளீட்டுக் கடன் பணிகள் மின்னணு மயமாக்கப்படும். கிராமப்புறங்களில் பெண்களின் முன்னேற்றத்திற்காக தான்யலட்சுமி என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. இதன் கீழ் விதைகளை சேமிப்பது வினியோகிக்கும் செயல்பாடுகளில் கிராமப்புறப் பெண்கள் ஈடுபடுவார்கள். இதோடு பெண்களுக்கான திட்டங்களுக்காகவே 28 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

மீன்வளத் துறையில் இளைஞர்கள் ஊக்குவிப்பு
2025-ம் ஆண்டுக்குள் கால்நடைகளைத் தாக்கும் நோய்களை (foot and mouth) அகற்ற முயற்சிகள் எடுக்கப்படும். மேலும் செயற்கை கருவூட்டல் ஊக்குவிக்கப்படும். மீன்வளத் துறையில் இளைஞர்களின் பங்கேற்பு அதிகரிக்கப்படும். கிராமப்புற இளைஞர்கள் சாகர் மித்ராக்களாக (கடலின் நண்பர்கள்) பணியாற்றுவதோடு மீனவர் அமைப்பையும் உருவாக்க உதவுவார்கள் என பல திட்டங்களை அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

ஹைட்ரோகார்பன் திட்டம்
இப்படியாக இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு முக்கியமாக 16 அம்ச திட்டங்களை அறிவித்திருந்தாலும், தமிழ்நாடு விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும், இது மிக வருதமளிக்கிறது என்றும் செய்திகள் வெளீயாகியுள்ளன. ஏனெனில் ஆங்காங்ககே நடந்து வரும் ஹைட்டோகார்பன் திட்டத்தில் எதுவும் மாற்றங்கள் இல்லாதது வறுத்தமளிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Source: Goodreturns