வளர்ச்சி 5.6 சதவீதம்: ‘பிட்ச் மதிப்பீடுஸ்’ கணிப்பு

வளர்ச்சி 5.6 சதவீதம்: ‘பிட்ச் மதிப்பீடுஸ்’ கணிப்பு

புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில், 5.6 சதவீதமாக இருக்கும் என, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை கணித்துள்ளது.அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில், அடுத்த நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6 முதல், 6.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில், பிட்ச் ஆய்வறிக்கை, அதிலிருந்து தன்னுடைய கணிப்பை குறைத்து அறிவித்துஉள்ளது.
இது குறித்து, ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த எங்கள் பார்வையை, பட்ஜெட் திட்டங்கள் மாற்றுவதில்லை. நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, 4.6 சதவீதமாக இருக்கும். அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி, 5.6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சரின் பட்ஜெட், தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக, பற்றாக்குறை இலக்கை தவறவிட்டுள்ளது.பட்ஜெட் இலக்குகள், நிதி ஒருங்கிணைப்பை மேலும் ஒத்தி வைப்பதை குறிப்பதாக இருக்கின்றன.பட்ஜெட்டில், பெயரளவிலான வளர்ச்சி, 10 சதவீதம் மற்றும் வருவாய் வளர்ச்சி, 9.2 சதவீதம் என தெரிவித்திருப்பது ஏற்கத்தகுந்தது என்றாலும், குறைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: dinamalar

Author Image
Agamagizhan R