பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: உலக லெவன் அணி துபாயில் பயிற்சியை தொடங்கியது

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: உலக லெவன் அணி துபாயில் பயிற்சியை தொடங்கியது

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று டி20 கிரிக்கெட் போட்டிக்கான உலக லெவன் அணி துபாயில் ஒன்றிணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு முன்னோட்டமாக உலக லெவன் அணி பாகிஸ்தான் சென்று மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த மூன்று போட்டிகள் செப்டம்பர் 12-ந்தேதி, செப்டம்பர் 13-ந்தேதி மற்றும் செப்டம்பர் 15-ந்தேதி நடக்கிறது. இதற்கான உலக அணிக்கு தென் ஆப்பிரிக்காவின் டு பிளிசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உள்பட அணியில் இடம்பிடித்துள்ளவர்கள் பயிற்சிக்காக துபாயில் ஒன்றிணைந்துள்ளனர்.

அவர்கள் துபாயில் இரண்டு நாட்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இந்த தொடருக்குப்பின் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

2009-ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தான் சென்று விளையாடிக் கொண்டிருக்கும்போது, இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன்பின் எந்த அணியும் பாகிஸ்தான் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar

Author Image
murugan