ஆஷஸ் தொடர்: பயிற்சி ஆட்டத்திற்கான இங்கிலாந்து அணிக்கு மொயீன் அலி கேப்டன்

கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்திற்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக மொயீன் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு இங்கிலாந்து அணி மூன்று பயிற்சி ஆட்டத்தில் மோதியது. அதன்பின் பிரிஸ்பேன், அடிலெய்டு டெஸ்டுகள் நடைபெற்றன.

இந்த இரண்டு டெஸ்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. 3-வது டெஸ்ட் உலகின் அதிவேக ஆடுகளம் எனக்கூறப்படும் பெர்த்தில் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் இங்கிலாந்து லெவன் அணி கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கெதிராக இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது.

இந்த ஆட்டம் நாளைமறுநாள் தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து லெவன் அணிக்கு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மொயீன் அலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து லெவன் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. மொயீன் அலி (கேப்டன்), 2. ஜேக் பால், 3. கேரி பேலன்ஸ், 4. கிரேன், 5. டோம் கர்ரான், 6. பென் டக்கெட், 7. பென் போக்ஸ் (விக்கெட் கீப்பர்), 8. ஜென்னிங்ஸ், 9. லாரன்ஸ், 10. லீச், 11. லியாம் லிவிங்ஸ்டன், 12. மார்க்வுட்.

 இதுவரை…

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ்
ஆஷஸ் 2-வது டெஸ்ட்: சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
ஓய்வு இப்போது இல்லை: அடிலெய்டில் கலக்கிய ஆண்டர்சன் சொல்கிறார்
6 விக்கெட் 178 ரன்கள்: இங்கிலாந்து அதிர்ச்சி அளிக்குமா?; பரபரப்பான கட்டத்தில் அடிலெய்டு டெஸ்ட்

Source: Maalaimalar

English summary
The ashes series: England team for a warm-up to Moeen Ali captain

Cricket Australia warm-up for perilous state Levant anikethirana