Press "Enter" to skip to content

தேசிய கைப்பந்து போட்டி: தமிழக அணி 2-வது தோல்வி

சென்னை :

65-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் 25 அணிகளும், பெண்கள் பிரிவில் 23 அணிகளும் பங்கேற்றுள்ளன. 3-வது நாளான நேற்று தமிழக அணிக்கு இரு பிரிவிலும் சோகமே மிஞ்சியது.

ஆண்களில் தமிழக அணி (பி பிரிவு) கேரளாவை எதிர்கொண்டது. முதல் இரு செட்டுகளை வசப்படுத்திய தமிழக வீரர்கள் வெற்றியின் விளிம்பு வரை வந்து நழுவ விட்டனர். 5 செட் வரை நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 25-20, 25-21, 22-25, 16-25, 18-20 என்ற செட் கணக்கில் போராடி தோற்றது. 3-வது லீக்கில் ஆடிய தமிழக அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.

மற்ற ஆட்டங்களில் சர்வீசஸ், ராஜஸ்தான், இந்தியன் ரெயில்வே அணிகள் வெற்றி கண்டன.பெண்கள் பிரிவில் தமிழக அணி 14-25, 11-25, 9-25 என்ற நேர் செட்டில் கேரளாவிடம் எளிதில் ‘சரண்’ அடைந்தது. தமிழக அணிக்கு இது 2-வது அடியாகும். ஏற்கனவே தெலுங்கானாவிடம் தோற்று இருந்தது. மற்ற ஆட்டங்களில் இந்தியன் ரெயில்வே, தெலுங்கானா, மராட்டிய அணிகள் வெற்றி பெற்றன.

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »
Mission News Theme by Compete Themes.