மீண்டும் தந்தையானார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்

சென்னை :

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்-பிரீத்தி தம்பதிக்கு ஏற்கனவே 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த பிரீத்திக்கு கடந்த 21-ந்தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த தகவலை 5 நாட்களுக்கு பிறகு நேற்று தான் பிரீத்தி டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்த மறுநாள் குழந்தை பிறந்துள்ளது. உடனடியாக அஸ்வின், ஐ.சி.சி. சார்பில் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டார். இது போன்ற மகிழ்ச்சியான தருணங்களை எல்லாம் ரசிகர்கள் சில நாட்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக இந்த தகவலை தாமதமாக வெளியிட்டதாக பிரீத்தி குறிப்பிட்டுள்ளார்.

Source: Maalaimalar