தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்: இலங்கை 205 ரன்னில் சுருண்டது

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்: இலங்கை 205 ரன்னில் சுருண்டது

தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று முன்தினம் (26-ந்தேதி) போர்ட் எலிசபெத்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய அந்த அணி முதல் இன்னிங்சில் 286 ரன்னில் ஆல் அவுட் ஆனது. டுமினி அதிகபட்சமாக 63 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் லக்மல் அதிகபட்சமாக ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

அடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. டி சில்வா 43 ரன்னுடனும், சமீரா 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் ஆட்டத்தை தொடர்ந்தனர். டி சில்வா நேற்றைய 43 ரன்னோடு வெளியேறினார். சமீரா 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 10-வது வீரராக களம் இறங்கிய லக்மல் 4 ரன்னில் ஆட்டமிழக்க இலங்கை அணி முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது.

தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் பிளாண்டர் 5 விக்கெட்டும், அப்போட் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 81 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை தென்ஆப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 39 ரன்கள் எடுத்துள்ளது.

Source: Maalaimalar

Author Image
murugan